01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, May 8, 2015

திரு சுப்ரமணிய சுவாமி அவர்களின் ஜாதக ஆராய்ச்சி விளக்கம் - Mr. Subramaniam swamy Horoscope analysis


நீதித்துறை பற்றிய  ஜோதிட ஆராய்ச்சி விளக்கம்.

திரு சுப்ரமணிய சுவாமி அவர்களின் ஜாதக ஆராய்ச்சி விளக்கம்.

லக்னாதிபதி சூரியன் ஆட்சி பெற்று இருக்கிறார்.வாக்கு ஸ்தான அதிபதி புதன் லக்னத்தில் அமர்ந்து சூரியனுடன் இணைந்து புதாத்ய யோகம் உண்டாக்கி லக்னத்தை பலம் படுத்தி இருக்கிறார்.


மேலும் வாக்கு ஸ்தானத்திற்கு ஆட்சி பெற்ற குரு பகவானின் பார்வை வலிமையாக விழுகிறது.

தொழில் காரகன் என்று அழைக்கப்படும் பத்தாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று உள்ளார்.

விரோதி ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெற்று அமைந்து உள்ளார்.

இப்படி வாக்கு ஸ்தானம் மற்றும் ஆறாம் வீடு அளவுக்கு அதிகமாக பலம் பெற்றும் மூன்றாம் வீட்டில் பாவி ராகுவும் இருந்து இவரை யார்க்கும் அஞ்சாத வக்கீலாக உருவெடுக்க செய்தது.

மேலும் நீதி துறையில் ஒருவன் ஈடுபட வேண்டும் எனில் ஜோதிட துறையில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் பலம் பெற வேண்டும். இவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்ச பலம் ( நீச்ச பங்க ராஜயோகம் ) பெற்று நிற்பது மேலும் சிறப்பை நீதி துறையில் கொடுத்தது.

ஆறாம் இடத்தில் இயற்கை மகா பாவி செவ்வாய் உச்சம் பெற்ற காரணத்தால் எதிரி என்று இவர் யாரை நினைத்தாலும் அவன் தோல்வி அடைவான். இதுவே ஆறாம் வீடு பலம் பெற்றால் கிடைக்கும் பலம்.

மேலும் ஒன்பதாம் வீட்டில் உச்ச பலம் ( நீச்ச பங்க ராஜயோகம் ) பெற்ற சனி நிற்பதால் தர்மம் ஜெயிக்க வேண்டும் என்ற என்னை மேலோங்கி இருக்கும்.

கல்வி ஸ்தானம் என்று சொல்லப்படும் நாலாம் வீட்டு செவ்வாய் , நீதித்துறையை குறிக்கும் ஆறாம் வீட்டில் பலம் பெற்றதால் சட்டத்தை கல்வியாக கற்கும் நிலை கொடுத்தது.

ஆறாம் அதிபதி சனி பகவான் உச்ச பலம் ( நீச்ச பங்க ராஜயோகம் ) பெற்ற காரணத்தால் நீதித்துறையில் ஜீவனம் செய்து முன்னேற்றம் காணும் அமைப்பு கொடுத்தது.

இரண்டாம் வீட்டில் விழும் ஆட்சி பெற்ற குருவின் பார்வையும் தெளிவான பேச்சும் அறிவும் கொடுத்தது.

இவருக்கு தற்போது நடக்கும் புதன் திசை குரு புத்தி மேலும் பல முன்னேற்றங்களை கொடுக்கும். சொல்லும் சொல்லிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

முன் பக்கம் செல்     கட்டண சேவை     பிரபல ஜாதகம் இங்கே