01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Saturday, April 30, 2016

மஹா பாவி செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை

2016 செப்டம்பர் மாதம் 15 ம் தேதி வரை மஹா பாவிகள் என்று அழைக்கப்படும் செவ்வாயும் சனியும் கூடி விருசிகத்தில் அமர்ந்து உள்ளனர்.

இப்படி பாவிகள் கூட்டம் போட்டு இருப்பது மிக பெரிய அழிவை கொடுக்கும்.

அணைத்து ராசி காரர்களுக்கும் தீமையே அதிகம் கொடுக்கும்.

மீன ராசி காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் பாவிகள் கூட்டம் இருப்பதால் தந்தைக்கு மிகுந்த கெடுதி கொடுக்கும். சேமிப்புகள் கரையும்.

மேச ராசி காரர்களுக்கு எட்டாம் வீட்டில் பாவிகள் கூடி இருப்பது விபத்தை கொடுக்கும்.  ஆயுளுக்கு தோஷம் கொடுக்கும். நோய் கொடுக்கும்.

ரிசப ராசி காரர்களுக்கு ஏழாம் வீட்டில் பாவிகளின் கூட்டம் போராட்டம் கொடுக்கும். மனைவிக்கு நோய் மற்றும் மன வேற்றுமை கொடுக்கும்.

மிதுன ராசி காரர்களுக்கு ஆறாம் வீட்டில் பாவிகள் கூட்டம் இருப்பது எதிரிகளை வெல்லும் அமைப்பு கொடுக்கும் என்றாலும் அனேக எதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். போராட்டம் நிறைந்து இருக்கும். நோய் கொடுக்கும்.

கடக ராசி காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் பாவிகள் கூட்டம் முன்னேற தடை தெய்வ அனுகூலம் இல்லாத நிலை, கையிருப்பு கரையும் நிலை. பிள்ளைகளால் சந்தோஷ குறை போன்ற பலனை அடைய வேண்டி வரும்.

சிம்ம ராசி கார்களுக்கு நாலாம் வீட்டில் பாவிகள் கூட்டம் மன அமைதியின்மை உடல் நல குறை வசதி வாய்ப்பு குறை அறிவு மங்கும் நிலை கொடுக்கும்.

கன்னி ராசி காரர்களுக்கு மூன்றில் பாவிகள் கூட்டம் காரிய வெற்றி கொடுக்கும். இருபினும் சகோதர வகையில் சச்சரவு கொடுக்கும். அண்டை அயலார் உடன் பிணக்கு ஏற்படும். காது மூக்கு தொண்டையில் நோய் தோன்றும்.

துலாம் ராசி கார்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் பாவிகள் கூட்டம் இருப்பதால் பண நஷ்டம் மனைவி வழி பிணக்கு மற்றும் குடும்ப ஒற்றுமை இல்லாமை.

விருச்சிக ராசி கார்களுக்கு ஜென்மத்திலேயே பாவிகள் கூட்டம் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும். முழுமையான நித்திரை வராது. அலைச்சல் டென்சன் கொடுக்கும்.

தனுசு ராசி கார்களுக்கு விரையத்தில் பாவிகள் கூட்டம் கையிருப்பை கரைக்கும். தேவை இல்லாத அலைச்சல் கொடுக்கும். நோய் கொடுக்கும். முழுமையான நித்திரை இருக்காது. 

மகர ராசி காரர்களுக்கு லாபத்தில் பாவிகள் சேர்க்கை முன்னேற்றம் கொடுக்கும். லாபாதிபதியும் குடும்பாதிபதியும் இணைந்து இருப்பதால் சனியும் செவ்வாயும் பகைவன் ஆகையால் மனைவிக்கு உடல்நிலை கெடும்.

கும்ப ராசி காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் பாவிகள் பண தட்டுபாடு ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும் அமைப்பு கொடுக்கும்.

பரிகாரம் :

முருக வழிபாடு மற்றும் ஆஞ்சநேய வழிபாடு ஏற்றம் தரும்.
  

No comments :

Post a Comment