01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, May 22, 2016

கிரகநிலைகள் எவ்வாறு ஜெயலலிதா வின் வெற்றியையும் கருணாநிதியின் தோல்வியையும் நிர்ணயித்தன


கிரகநிலைகள் எவ்வாறு ஜெயலலிதா வின் வெற்றியையும்  கருணாநிதியின் தோல்வியையும் நிர்ணயித்தன.

மிதுன லக்னத்தில் பிறந்த ஜெயலலிதா வின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனுடன் அமைந்து புதாத்திய யோகத்தில் ஈடுபட்டு இருப்பதால் அபரீத அறிவும் அணைத்து பாக்கியத்தையும் அனுபவிக்கும் அமைப்பும் கொடுத்தது.

பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் இருந்து சினிமா துறையில் சாதனை செய்ய வைத்தான் .

மேலும் இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்து  ஆட்சி பெற்ற குரு பகவான் லக்னத்தை பார்த்தார் . அரசியல் வாழ்வும் அமைந்தது.

அரசியலில் வெற்றி காண வேண்டும் என்றால் சனி பகவான் 2,4,7 இல் அமர்ந்து குரு பார்வை பெற வேண்டும். 

மேலும் சூரியனும் சந்திரனும் கூடி அம்மாவாசை யோகமும் இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஒருவரை அரசியலில் மிக உயரதிருக்கு கொண்டு சொல்லும்.

தற்போது ஜெயலலிதா அவர்களுக்கு குரு பகவான் திசை நடை பெறுகிறது. குரு பகவான் பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆட்சி பெற்ற கிரகம் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.

கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் அம்மாவாசை யோகம்  உண்டாகி பலமாக இருக்கிறது. மேலும் சனி பகவான் நாலாம் வீட்டில் அமர்ந்து உச்சம் பெற்ற காரணத்தால் அரசியல் வாழ்வு வெற்றி கொடுத்தது.


தற்போது தோராயமாக திரு கருணாநிதி அவர்களுக்கு சுக்கிர திசை நடை பெறுகிறது. சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறான். இந்த அமைப்பு ஒருவருக்கு ஏமாற்றம் மற்றும் தோல்வி கொடுக்கும்.
( Courtesy: Date of birth and place birth taken from astrosage)