01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

சனி / மாந்தி / குளிகன்




சனி தசை வந்துவிட்டாலே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். யார் என்ன சொன்னாலும் நம்பக் கூடாது. உங்க மனைவியை அங்க பார்த்தேன், அவர் அப்படியா? மாமனார், மாமியாரைப் பற்றி எல்லாம் தவறாகச் சொல்வார்கள். 
எதையும் நம்பக் கூடாது. அட்டமத்து சனி, நேரடியாக சண்டையை உருவாக்காமல், நம்மைச் சார்ந்த உறவினர்கள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
பரிகாரம் என்று சொன்னால், முக்கியமாக சந்தேகப்படுதலை தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சுவையான உணவுகளைக் குறைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாமல் சாப்பிடவும், சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை கேவலாமாக எது சொன்னாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். 
பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம்.
எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம்.




SANI: Watchman, cleaners, peon, sweeper, cobbler, miner, brick layers.

சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள்

1 சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும் உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள், மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள். ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்

2 சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும் ++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பொதுவாக நன்மையான காலம்.

3 சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள் உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம் விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும். சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்

4 சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும் ++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும். வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.

5 சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும் நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும் பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி, மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும். மன உளைச்சல் இருக்கும்.

6 சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும் சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும். உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை இழக்க நேரிடும்.

7 சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும்

8 சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில் இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால் மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும் எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்

சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும் ++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார் சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள். எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில் அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.

கோள்சாரச் சனி (Transit Saturn) பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன் நன்மை செய்யக்கூடியவர் அல்ல! நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில் நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது. அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும் உபத்திரவம் இருக்காது. பிடுங்கல் இருக்காது! சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம் கொடுக்க வேண்டிய நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும். நொந்து போகும் அளவிற்குத் தாமதப்படும். கோள்சாரத்தில் 3ஆம் இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல் இருக்கும் அதிக உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள்.

சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே நல்லது. செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில் சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல. தொல்லையானது. அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும் நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல! சனியும் புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு) நன்மையளிக்கும் Mercury is an auspicious planet but it is basically a neutral planet. It adopts the nature of the planets placed in the same house and acts like them. The combination in between Saturn and Mercury is of benefic nature. The house in which this combination takes place receives positive results.

சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே தீரும். யாரும் தப்பிக்க முடியாது. இறைவழிபாடு பயனளிக்கும்.

வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

மேஷத்தில் சனி: இங்கே சனி நீசம். ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.

ரிஷபத்தில் சனி இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால் உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர். The keeping of one's thoughts and emotions to oneself: கறுப்பான தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு எதிரானவர். எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள் தந்திரமிக்கவர்கள் சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு இருப்பார்கள்

மிதுனத்தில் சனி இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால் ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான். ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள். சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள் இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்

கடகத்தில் சனி இது சந்திரனின் வீடு சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள். மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள். சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.

சிம்மத்தில் சனி பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் (firmly or stubbornly adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument, persuasion, or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட ஒவ்வாத சிந்தனையுடையவர்கள் சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்

கன்னியில் சனி கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள் இருக்கக்கூடியவர்கள்

துலா ராசியில் சனி ++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன் அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான். செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான் (இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின் வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?) அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன் சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள் -

விருச்சிகத்தில் சனி இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல! ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன். சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம். சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள் சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்

தனுசு ராசியில் சனி! ++++++இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில் புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும். வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும். அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்

மகரத்தில் சனி ++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும் திகழ்வான் சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்

கும்பத்தில் சனி ++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.

மீனத்தில் சனி ++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான். நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,

இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆகவே பொறுமையாக அலசுங்கள்



பிறந்த ஜாதகம், அவர்களுடைய இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை, அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியிலுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள் இருக்கும். உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதியான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட் போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள் அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன் இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக முடியாதோ,

அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது. இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல! வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட் போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும் சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன் இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக் கொண்டவன் மட்டுமே. ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற் சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும். யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப வேண்டாம்!

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும் 2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார் ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது சாடே சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன் அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும். அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள், வம்பு, வழக்குகள்,

தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும் வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத்தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதியின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும். ’சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார். சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய மூன்று ராசிகளைத் தவிர மற்ற இடங்களில் அவர் நன்மைகளைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்குமேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது. ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்கொண்டால், அவர் வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்பார்கள். முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும். அது அறிவு,கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்கவைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame and detachment Period என்றும் சொல்லலாம்) அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக் கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக் காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள். மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில் நிர்ணயிக்கப் பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும் காலமென்றால்,

அவனுடைய கதையை முடித்துக் கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும். சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப் பிடித்துக் கொண்டு உயிரோடு இருப்பார்கள். அவர்கள் தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள், அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of Second Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள் இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும்.

ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில், 7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக் கொடுப்பார் வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நிலபுலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட வைத்து விடுவார்

சனி, ஒரு ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்கான பலாபலன்கள்

1ல் அதாவது லக்கினத்தில் சனி லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர் குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர் நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர் சமூகத்தோடு ஒத்துப்போகாதவர் கடின மனதை உடையவர். தந்திரமானவர் கஞ்சத்தனம் மிக்கவர் சுத்தமில்லாதவர் குறுகுறுப்பானவர் உடற்குறைபாடுடையவர் கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

2ல் Saturn in the Second House Saturn makes one not above want and prone to lying. Will live in foreign lands. Will be a lover of justice. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம் பிரபலமில்லாமை தடைப்பட்ட கல்வி கண்பார்வைக் குறைபாடு சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர் அதிரடியாகப் பேசுபவர் சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும் போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

3ல் ++++Saturn in the Third House Saturn in the 3rd makes one very intelligent & liberal minded. Will have strength of character and will be adventurous. Will have subordinates and all the comforts of life. துணிச்சல் மிக்கவர் தைரியம் மிக்கவர் விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்) புத்திசாலித்தனம் மிக்கவர் செல்வந்தர் சாதனைகள் படைப்பவர் சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும் அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

4ல் Saturn in the Fourth House Affliction to the heart. Will lack happiness and mental peace. Will be crooked and will be a violator of social norms. Will live in foreign lands. மகிழ்ச்சி இல்லாதவர் திடீர் இழப்புக்களை உடையவர் குறுகிய மனப்பான்மை உடையவர் நல்ல சிந்தனையாளர் அரசியல் ஆதாயம் இல்லாதவர் சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும் இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள் தாய்க்குக் கண்டம் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

5ல் Saturn in the Fifth House Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth. Will lack intelligence and will be fickle minded. Will have high longevity. குறுகிய மனதை உடையவர் சகஜமாகப் பழகாதவர் சிலருக்குக் குழந்தைகள் இருக்காது விநோதமான கண்ணோட்டங்களை உடையவர் எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர் அரசுக்கு எதிராக நடப்பவர் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) -

6ல் Saturn in the Sixth House Saturn in the sixth is the destroyer of enemies. Will love all the pleasures of the mundane. Will be a voracious eater. Wealth will grace the native in no uncertain measure. பிடிவாதமான ஆசாமி ஆரோக்கியம் இல்லாதவர் சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும் வாக்குவாதம் செய்பவர்கள் சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும் புத்திசாலி சுறுசுறுப்பானவர் சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

7ல் ++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும் உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார். அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா? அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின். ஜாலியான ஆசாமி. சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும் சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும் (இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்) நளினமானவர் மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?) ஆர்வமுள்ளவர் அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார். சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்

8ல் இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள் உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும். சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள் ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை குடிப்பழக்கம் இருக்கும். பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும் கண் பார்வைக் கோளாறு இருக்கும். தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும் ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும் சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால் ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான், விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான். கொடூரமான சிந்தனைகள் உடையவன் நீண்ட ஆயுளை உடையவன் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

9ல் ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும் அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும். சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள் வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன் கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும். சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது. சாமியாவது, பூதமாவது போடா என்பான்.

10ல் ++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம் கிடைக்கும். Saturn makes one have scholarship புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள். சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எல்லா வசதிகளும் தேடிவரும். ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள் நல்ல உழைப்பாளி சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்

11ல் +++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம். This is the best postion for Saturn. Saturn well posited in the eleventh makes one highly determined, healthy, wealthy and wise. Will have royal favour. Will be a good sculptor. Will have a lot of subordinates. சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும் சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள் சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள் சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும் வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!

12ல் இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம் சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப் பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம் ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி! எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி! ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான். "போனால் போகட்டும் போடா" என்று பாடுவான் ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும் மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும் Saturn makes one devoid of happiness & wealth. Will be tormented by many an illness ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான் தனிமைப்பட்டு விடுவான். (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்)

சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர் பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன் சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும் ஏற்படும். ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது.

இந்த விதிகளில் ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. Saturn destroys the house it occupies. The seventh place position is exempted since Saturn receives directional strength. ஜாதகத்தில் வலுவாக இருக்கும் சனி, அனுசரித்துச் செயலாற்றும் தன்மை, புகழ், பொறுமை, தலைமை ஏற்கும் சக்தி, அதிகாரம், நீண்ட ஆயுள், நிர்வாகத்திறமை, உண்மையாக இருத்தல், விசுவாசம், நேர்மை, நியாயமாக இருத்தல்,

தவறு எது சரி எது என்று உணர்ந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைச் ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகத்தில் வலுவில்லாமல் தீமை பயக்கும் நிலையில் இருக்கும் சனி துன்பம், துயரம், தாமதம், தடைகள், ஏமாற்றங்கள், வம்பு, வழக்குகள்,வெறுப்பு, கஷ்டங்கள் என்று வரிசையாக தொல்லைப் படுத்தும், அவதிப்படும் சூழலையே ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகன் நம்பிக்கையின்மையோடும், உணர்ச்சி வசப்படும் நிலைமையோடும், ரகசியமாகவும் செயல்படும் நிலைமைக்கும் தள்ளப்படுவான். இந்த categoryயில் (miseries, sorrows, delay, obstruction, disappointment, disputes, dejection, difficulties)ஏதாவது விடுபட்டிருக்கிறதா? விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

சனிக்கு உரிய கிழமை சனிக்கிழமை. உலகில் அது எந்த நாடாக இருந்தாலும் சனிக்கிழமைதான். (Saturday is for Saturn) வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் அகிய மூன்றும் உலகிற்கு இந்தியர்கள் அளித்த கொடை. இந்தியாவில் இருந்து வணிகத்திற்காக அக்காலத்தில் வந்து சென்ற கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாக, அது உலகெங்கும் பரவியது சனியின் ஆதிக்க திசை மேற்கு சனிக்கு உரிய நிறம்: கறுப்பு சனிக்கு உரிய நவரத்தினக் கல்: நீலக் கல் (blue sapphire) சனிக்கு உரிய எண்: 8

சனிக்குச் சொந்த வீடுகள்: மகரம், கும்பம் சனிக்கு நட்பு வீடுகள்: ரிஷபம், மிதுனம், கன்னி சனிக்குச் சம வீடுகள்: தனுசு, மீனம் சனிக்குப் பகை வீடுகள்; கடகம், சிம்மம், விருச்சிகம் சனிக்கு உச்ச வீடு: துலாம் சனிக்கு நீச வீடு: மேஷம் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சனிக்கு 100% வலிமை இருக்கும். சனியுடன் சூரியன் சேரக்கூடாது. அதுவும் ஜாதகனின் லக்கினத்தில் சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள், உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும் போல ஒற்றுமையாக இருப்பார்கள்:-)))) சம வீட்டில் இருக்கும் சனிக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சனிக்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் சனிக்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த சனிக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சனிக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் Avery Company தராசை வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!



சிம்மத்தின் அதிபதி சூரியன். சனிக்கும் சூரியனுக்கும் எப்போதும் ஆகாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனுக்கு பிறந்தவர்தான் சனி. சூரியனின் மனைவி பெயர் சம்ஞா. சூரியனுக்கும் சம்ஞாவுக்கும் பிறந்தவர் யமன். என்னதான் அன்பு மனைவியாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்தை சம்ஞாவால் தாங்க முடியவில்லை. அதனால் தன்னுடைய நிழலை ஒரு பெண்ணாக (அதன் பெயர் சாயா) படைத்து சூரியனிடம் தள்ளிவிட்டு தந்தை வீட்டிற்கு போய்விட்டாள்.

இந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. ஒரு கட்டத்தில் பங்காளிச் சண்டை முற்றி சனியை யமன் எட்டி உதைக்க சனிக்கு கால் ஒடிந்து விட்டது. அதனால் சனி நொண்டி நொண்டி மெதுவாகத்தான் நடப்பார். ஆகவே அவருக்கு சனைச்சரன் ( மெதுவாக நடப்பவன்) என்று பெயர்... ராசி மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வர சனிதான் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதாவது 30 ஆண்டுகள். இப்படி பலவிதங்களில் பாதிக்கப்பட்டதால் சூரியன் மீது சனியனுக்கு அடங்காத கோபம். அதனால்தான் சிம்ம ராசிக்காரர்களை எழரைச் சனி காலத்தில் சனிபகவான் படாத பாடு படுத்தி விடுகிறார். ஏழரைச் சனி காலத்தில் சனியனோடு மல்லுக்கட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தால் அவர் சற்று கரிசனமாகவே கஷ்டத்தைக் கொடுப்பார்.

இந்தச் சுற்றில் சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மகம் ஒன்றாம் பாதத்திற்கு அதிபதி செவ்வாய் .போர்க்குணம் கொண்டவர். இவர் யாருக்கும் மடங்கிப் போக விடமாட்டார். இதுதான் இருக்கும் பலவீனம். இதைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அருகில் இருக்கும் ஆஸ்தான ஜோதிடர்களின் வேலை. அதே நேரத்தில் ஏழரைச் சனி எல்லாருக்கும் கெடுதலை செய்வார் என்று கூறமுடியாது. நட்பு வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவற்றில் இருந்தால் சனியின் தொல்லை மிகக் குறைவாகவே இருக்கும்.

6. சனி
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

-----


2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரிவு, மந்தமான சூழ்நிலை, வீண் வாக்குவாதம், தந்தை சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.


3ல் இருந்தால் இளைய சகோதர தோஷம் என்றாலும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.

4ல் இருந்தால் கல்வியில் இடையூறு தாய்க்கு தோஷம் அசையா சொத்து அமைய இடையூறுகள் சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.

5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.

7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.



-------------------

சனி.

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
உரிய பால் : அலிக் கிரகம்.
உரிய நிறம் : கருமை.
உரிய இனம் : சூத்திர இனம்.
உரிய வடிவம் : குள்ள உயரம்.
உரிய அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம் : இரும்பு.
உரிய மொழி : அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் : நீலம்.
உரிய ஆடை : கறுப்பு.
உரிய மலர் : கருங்குவளை.
உரிய தூபம் : கருங்காலி.
உரிய வாகனம் : காகம், எருமை.
உரிய சமித்து : வன்னி.
உரிய சுவை : கைப்பு.
உரிய தான்யம் : எள்.
உரிய பஞ்ச பூதம் : ஆகாயம்.
உரிய நாடி : வத நாடி.
உரிய திக்கு : மேற்கு.
உரிய அதி தேவதை : யமன், சாஸ்தா.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : தாமசம்.
உரிய ஆசன வடிவம் : வில்.
உரிய தேசம் : செளராஷ்டிரம்.
நட்புப் பெற்ற கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் : பத்தொன்பது ஆண்டுகள்.
சனியி மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உரிய உப கிரகம் : குளிகன்.
உரிய காரகத்துவம் : ஆயுள் காரகன்.
தீர்க்க ஆயுள், ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, வாயடித்தல், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்|
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸநைச்சரம்||"
சனி காயத்ரி..
"ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||"

-----------------

குளிகன்

இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான்.

 பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன்.


மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது
சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது
இது துணை கிரகமாக செயல்படுகிறது
பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது
இந்த உபகிரகம் எப்போது உதயமாகும் என்று ஒரு நிலையான கணக்கு உள்ளது
கிழமை                                          பகல் நாழிகை                               இரவு நாளிகை
நாயிறு                                                    26                                                         10
திங்கள்                                                   22                                                          06
செவ்வாய்                                              18                                                         02
புதன்                                                       14                                                          26
வியாழன்                                               10                                                         22
வெள்ளி                                                  06                                                         18
சனி                                                         02                                                          14

ஓவொரு நாளும் சூரிய உதயத்திற்கு பின் ,மேலே குறிப்பிட்ட நாழிகையில் மாந்தி உருவாகிறது ,அந்த நாளிக வினாடிக்கு எந்த லக்னம் உதயமாகிறதோ அந்த ராசியில் குளிகனை குறிப்பிடவேண்டும்
மொத்தத்தில் லக்னத்தை கணிப்பது போலவே இதற்கும் கணிதம் செய்யவேண்டும்
எப்படி கணிதம் செய்யவேண்டும் என்பதை நாம் கற்றுகொள்வோம்
அதற்க்கு முன் மாந்தியபற்றி விரிவாக கானவேநன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!
நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.




சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.



ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.



எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம்.


-ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்!



பிறவிப் பலனை அறிய, ஜாதகத்தில் ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சனியின் மைந்தன் மாந்தியின் அமைப்பும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன் ஆவார். சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைவிட மாந்திக்கு அதிகப் பலன் உண்டு என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.



ஸ்ரீவிஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்த பின்னரே ராகு- கேதுக்கள் தோன்றி னர். தேவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பன மாக விளங்கிய இராவணனின் அழிவுக்குப் பிறகு ராகு- கேதுக்கள் மகாவிஷ்ணுவின் ஆசியுடன் கிரகப் பதவியேற்றனர்.



இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி
.
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!


ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி ஆவியுலகத் தலைவர் ஆவார். சனீஸ்வரர் ஸ்ரீஐயப்பனுள் இணைந்தவர். மாந்தி ஆஞ்சனேயருள் இணைந்தவர்.



கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கüல் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தா லும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்கüல் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். மேலும் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டிருந்தாலும், மாந்தியைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகின்றனர்.



ஜாதக ராசிக்கட்டத்தில் மாந்தியைக் குறிக்காவிட்டால் மாந்தி என்ற கிரகம் இல்லையென்று ஆகிவிடாது. ஜாதக ராசிக்கட்டங்களான பன்னிரண்டு வீடுகüல் ஏதாவது ஒன்றில் நிச்சயம் மாந்தி இருப்பார். மாந்தி அமர்ந்த இல்லத்திற்கேற்ப- மாந்தி சேர்க்கை பெற்ற கிரகத்திற்கேற்ப அதன் பலன்கள் நமக்கு நிச்சயம் நடைபெறும்.



மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.



சனீஸ்வரர் கெடுப்பது உண்டென்றாலும், குதூகலமான சந்தோஷத்தையும் நன்மை களையும், செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் போன்றவற்றையும் வாரிவழங்கி, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வானளாவ உயர்த்திப் புகழ் பெற வைப்பார். இதனால்தான் "மந்தன் செய்வதைப்போல் மகேஸ்வரன்கூட செய்ய மாட்டார்' எனச் சொல்வார்கள். ஸ்ரீசனீஸ்வர ரைப்போல் மைந்தன் மாந்திக்கும் மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும் பொருந்தும்.



ஜாதகத்தில் மாந்தியின் அமைப்பில் பூர்வீக சாபம், அதிர்ஷ்டம், குடும்பம், தொழில், மனைவி, எதிர்பாராத நன்மை, திடீரென ஏற்படும் விபத்துகள், மரண அபாயம், அவமானம், புதையல், துர்ஆவிகüனால் துன்பம் போன்றவற்றை அறியலாம்.



பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்கüல் தீய பலன்களையே அüப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பது சிறந்த பலனாகும்.



ஜாதகத்தில் மாந்தியின் பலன்கள்



ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்üட்ட எல்லா ஐஸ்வர்யங் களுடனும் வாழ்வார். லக்னத்திற்கு 11-ல் மாந்தி நின்றாலும் ராஜயோகம்.



லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.



மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.



ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.



பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.



மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.



லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.



லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.



லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.



பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.



ஆண், பெண் ஜாதகங்கüல் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும்.



லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்- குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர் செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்.



குளிகை  அற்புதப் பலன்கள்



மாந்திக்கு குளிகன்  என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குளிகன்  காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாüலும் தான் ஆட்சி செய்யும் குளிகன்  காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.



குளிகன்  காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்; அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். மனைவியுடன் உறவு கொள்ளலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். பாங்கில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குளிகன்  காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.



அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குளிகன்  காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.



பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குளிகன் க்காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததேண்டியம் அவசியம் நமக்கு உள்ளது
சரி மாணவர்களே இனி பன்னிரண்டு பாவத்திலும் மாந்தி நின்ற பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
1ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்




2ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும். சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.



3ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.



4ல் மாந்தி இருந்தால்: ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)



5ல் மாந்தி இருந்தால்: நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.



++++++6ல் மாந்தி இருந்தால்: துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)



7ல் மாந்தி இருந்தால்: வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!



8ல் மாந்தி இருந்தால்: கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.



9ல் மாந்தி இருந்தால்: தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.



10ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்



11ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.



12ல் மாந்தி இருந்தால்: ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும். சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

2 comments :