01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

புதன்


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

புதன் தசையின் பலன்கள் 

ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம். 
புதன் நன்றாக அமையப் பெற்றவர்கள் சுயமாக முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். சபையில் பேசும் போது கூட முதலில் பேசத் தயங்குவார்கள். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னரே இவர்கள் பேசுவார்கள். ஆனால் தேர்வின் போது சரியான பதிலை எழுதுவதற்கு இவர்கள் தயங்க மாட்டார்கள்.
புதன் நன்றாக இருந்தால் சொந்தத்தில் (மாமன் மகள், அத்தை மகள்) திருமணம் நடக்கும். விடாமுயற்சி உடையவர்களும் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களே. வணிகத்திற்கு உரியவரும் புதன்தான். பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும். ஆனால் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையும் எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம். தூதுக்கோள் என்றும் புதன் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் மன்னர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு போர் மூளும் சூழல் நிலவும் தருணத்தில், புதன் ஆதிக்கம் (ஆயில்யம், கேட்டை, ரேவதி அல்லது மிதுனம்/கன்னி ராசி) பெற்ற தகுதியான நபர் தூது சென்றால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விடுவார் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.


புதனின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் எதிரிகள் கூட பகைத்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு மனிதாபிமானமும் ஒரு காரணம். 
எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் புதன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்காது. உதாரணமாக அலுவலகத்திலேயே சிறந்த பணியாளர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காது. புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற துரதிருஷ்டமும் ஏற்படும். 
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிறு துயரமும் இவர்களை பெரியளவில் பாதிக்கும். புதன் தசை மொத்தம் 17 ஆண்டுகள் நடக்கும். சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள். 
கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள்.
யாராவது கண்ணீர் விட்டால் இவர்களுக்கு மனம் இளகி விடும். கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள். மனித நேயம் மிக்கவர்களாகத் திகழும் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனாலேயே ஏமாற்றப்படுவார்கள். 
புதன் நன்றாக இருந்தால் அவர்கள் ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்வார்கள். கல்விக் கூடம் நடத்துவதற்கும் புதனின் தயவு தேவை. வில் வித்தைக்கு மட்டுமின்றி அனைத்து உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் உரியவர் புதன். திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் என்பதால் சதுரங்க விளையாட்டில் நல்ல திறமை பெற்றிருப்பார்கள்.
 --------------------------------------------------------------------------------------

புதன் தசையின் காலம் 17 ஆண்டுகள். புதன் தசையில் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிடும் முன்பாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறாரா? எனப் பார்க்க வேண்டும். என்ன ராசி, லக்னத்தில் பிறந்தவர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதேபோல் எத்தனையாவது தசையாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புதன் தசை வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் (4வது, 5வது, 6வது) ஒவ்வொரு பலன் உண்டு.

கல்வி, கேள்விகளுக்கு உரிய கிரகம் புதன். சபையில் பேசும் திறன், சமயோசித புத்தி ஆகியவற்றை கொடுக்கக் கூடியதும் புதன். அந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் தனாதிபதி, சுகாதிபதி, பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும்.

வியாபாரத்தில் செல்வம் கொழிக்கும். முதல் தரமான வணிகம் (கப்பல் வணிகத்தில் துவங்கி), பங்குச்சந்தை ஆகியவற்றிற்கு உரியவரும் புதன்தான். அந்த புதன், ராகு/கேது அல்லது செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் மாரகத்திற்கு சமமான மோசமான பலன்களை ஏற்படுத்தும்.

புதன் நீச்சமாகி கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வையில் இருந்தால் அந்த ஜாதகர் அவமானத்திற்கு உள்ளாவார். புதன் தசை காலத்தில் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனால் அதிகளவில் அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது.

ஆனால், அதே புதன் யோகாதிபதிகளுடன் சேர்ந்திருந்தால் தொழிலதிபர் ஆகுதல், வர்த்தக சங்கத்தில் பெரிய பொறுப்புக்கு வருவது, பங்குச்சந்தையில் வருவாய் பெறுவது போன்றவையும் நிகழும்.

கவிதைகளில் புதுக்கவிதை புதனுடையது. ஆய்வுக் கட்டுரை, பழைய நூல்களுக்கு உரை எழுதுதல் ஆகியவையும் புதன் நன்றாக இருப்பவர்களுக்கு சாத்தியப்படும்.

-********************************************-

புதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுடன் சேர்ந்தால் ஜாதகனின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன் சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும். அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு எதிர்மாறான விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான். ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde) இருந்தாலும் புத்தி வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும். வக்கிர சிந்தனை என்றால் என்ன? ஒரு சின்ன உதாரணம். மாற்றான் தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான் முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான் பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான். அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன் கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான். தகாத வேலை என்றால் என்ன? பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில் இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல் இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன? ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான்.
புதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி
உச்ச வீடு: கன்னி
நீச வீடு: மீனம்
நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,
சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு: கடகம் மட்டுமே!

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் கிரகத்திற்கு 100% வலிமை உண்டு.

சம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை!

உச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை
அனுபவத்தில் சொல்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
அஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்

புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல் களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்
பலன்கள்.

புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும் மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும்
ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.

புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்

புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான் Either he will be a ruler or associated with rulers
========================================================
இருக்கும் இடத்தை வைத்துப் பலன் பார்ப்பது

உதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம்
அதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான்
அதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.
சூரியனின் வீடு அல்லவா அது!

1. சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு (House of Finance, Family affairs & speech) மற்றும் பதினொன்றாம் (House of Profits - லாபஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர் களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4 & 9ஆம் வீடுகளுக்கு அதிபதி அவன்) எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமானவன். அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது. இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில் எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும் வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.

2. 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்
=========================================================
கன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் இடத்து அதிபதி. ஆகவே கன்னி லக்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கிய மானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம் இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)

அப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில் கொள்ளவும்.

அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப் பிடித்துக் கொடுப்பான்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான்.

இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து முக்கியமானவன்
=======================================================
தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி அல்லது அரசன்)
10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன் இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்துப் புதன் முக்கியமானவன்
=======================================================
மகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன் பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த லக்கின வேலைகளைச் செய்வான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பம்: 5th Lord & 8th Lord
மீனம்: 4th lord and 7th lord
மேஷம்: 3rd lord and 6th lord
ரிஷபம்: 2nd lord and 5th lord
மிதுனம்: Lagna lord and 4th lord
கடகம்: 12th lord & 3rd lord

மேற் பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து
கொள்ளுங்கள்
BUDHA: News paper vendor/reporter, teacher, novelist, writer, author, painter, landlord, compositer, postman, broker, draftsman, inspector, examiner, publisher, printer, editor, book binder, book sellers, merchant, journalist, clerk, accountant, mathematicians, public speaker, ambassador, imports and exports, air and land transports.

ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும் இல்லையென்றால் இல்லை புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும்! நன்றாக இருப்பது என்பது என்ன? 1. புதன் சொந்த வீட்டில் இருப்பது 2. புதன் உச்சம் பெற்று இருப்பது 3. நட்பு வீடுகளில் இருப்பது. அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள் அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர் ஆகிவிடுவார். சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார் அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல் களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம். 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும் நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும். 25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும் 20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே தரும் 20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும் மோசமான பலன்களே கிடைக்கும். அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும் 4 பரல்கள் என்பது சராசரி 3 என்பது சுமாரானது 2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது போய்விடும் அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள். அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும். அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்

நல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக் கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
7. புதன்
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 
-----------------------------
புதன்.

சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.
உரிய பால் : அலி கிரகம்.
உரிய நிறம் : பச்சை நிறம்.
உரிய இனம் : வைசிய இனம்.
உரிய வடிவம் : உயரம்.
உரிய அவயம் : கழுத்து.
உரிய உலோகம் : பித்தளை.
உரிய மொழி : தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்.
உரிய ரத்தினம் : மரகதம்.
உரிய ஆடை : நல்ல பச்சை நிற ஆடை.
உரிய மலர் : வெண்காந்தள்.
உரிய தூபம் : கற்பூரம்.
உரிய வாகனம் : குதிரை, நரி.
உரிய சமித்து : நாயுருவி.
உரிய சுவை : உவர்ப்பு.
உரிய பஞ்ச பூதம் : வாயு.
உரிய நாடி : பித்த நாடி.
உரிய திக்கு : வடக்கு.
உரிய அதி தேவதை : விஷ்ணு.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : தாமசம்.
உரிய ஆசன வடிவம் : அம்பு.
உரிய தேசம் : மகதம்.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சுக்கிரன்.
பகைப் பெற்ற கோள் : சந்திரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம்.
உரிய தெசா புத்திக் காலம் : பதினேழு ஆண்டுகள்.
புதனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீனம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உரிய உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
உரிய காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுகு எல்லாம் புதன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

"இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"பிரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யகம்||"

புதன் காயத்ரி

"ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்||"

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

No comments :

Post a Comment