01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

தொழில் / கல்வி


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

தொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்

ஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய யோகமானது ஜாதக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது அமையாது. மற்றவர்கள் கொடுத்தும்  ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை. எவ்வளவுதான் செல்வம் செல்வாக்குடன் இருந்தாலும், சம்பாதித்து லாபத்தை அடையக்கூடிய யோகம் இருந்தால் மட்டுமே லாபம் அமையும்
.
ஜோதிடத்தில் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு திசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு செல்வம் சேர்ந்து விடுவது மட்டுமின்றி அவரின் சந்ததியினருக்கும் போதிய செல்வங்களை சேர்த்து வைத்துவிட முடியும். சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவிற்கு சக்தியையும் கொடுக்கும்.


ஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால், 10ம் வீட்டின் அதிபதியும், 10ம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கக்கூடிய தசா புக்தியானதும் பலமாக இருந்தல் மிகவும் அவசியம். தசா புக்தி என்பது ஒருவரின் பிறந்த கால தசா இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புக்திகளை குறிப்பிடுவதாகும். இந்த தசா புக்திகளைக் கொண்டுதான் அவருக்கு உண்டாகக்வடிய பலா பலன்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நவக்கிரகங்கள் சுழற்சி முறையில் நம்மை ஆட்சி செய்வது தான் தசா புக்தி ஆகும். குறிப்பாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றனரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசையானது முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் திசைகள் சுழற்சி முறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். திசையின் உட்பிரிவாக ஒவ்வொரு கிரகத்தின் திசையிலும் ஒன்பது  கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலங்கள் 120 வருடங்கள் என்பதனால், எல்லாத் திசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்ய முடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.

ஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனை பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தை தரக்கூடிய தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தை அடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய திசையானது பலம் பெற்ற கிரகத்தின் திசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10 லும், திரிகோண ஸ்தானங்களாகிய 1,5,9 லும், தனலாப ஸ்தானங்களாகிய 2,11 லும் நவகிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் 1,4,5,7,9,10 ல் அமைவதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவைகள் திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,10, 11 அமைவதும் நல்லது. மேற்கூறியவாறு கிரகங்கள் அமையப்பெற்றால் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும்  அமையும் கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் மட்டுமே நற்பலனை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர்  நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.

உதாரணமாக, சனியானவர் 3,6, 10, 11 ல் அமைந்தால் அதன் தசா புக்தி காலத்தில் நற்பலன்களை வாரி வழங்குவார் என்றாலும், சனி தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, அதன் வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, தனது சொந்த வீடான மகரம், கும்பத்தில் அமைந்தோ, அதன் தசா புக்தியானது நடைபெற்றால் நற்பலன்களை அடைவது மட்டுமின்றி எல்லா வகையிலும் லாபங்களை எளிதில் அடைய முடியும். அதுவே சனியானவர் தனக்கு பகை கிரக வீடான சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருந்து அதன் தசாபுக்தியானது நடைபெற்றால் எதிர்பார்க்கும் நற்பலன்களை அடைவதில் தடைகள் உண்டாகும்.

ஆக, நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமானப் பலன்கள் கிடைக்கும். அதுவே, நடக்கக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடடைய திசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசையாக இருந்தாலும் (சுபர் 3,6,8,12 பாவிகள் 8,12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசை பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் திசை, பாதக ஸ்தானத்தில்அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவும், இருந்தாலும், தொழிலில் லாபங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.

தசாபுக்தி  பலன்களை பற்றி தெளிவாக ஆராயும் போது லக்னாதிபதிக்கு பகை கிரகங்களின் தசா புக்தியிலும், தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமமான 6,8 ல் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி காலங்களிலும் தொழில் ரீதியாக லாபங்கள், வெற்றிகள் அடைய தடைகள் ஏற்படும். இது மட்டுமின்றி ஒருவருக்கு நடைபெறக்கூடியது 3&வது  திசை காலங்களிலும் அவர் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் முழு பலனை அடைய முடியாமல் எதிலும் ஒரு  திருப்தியற்ற நிலையே உண்டாகும். 3&வது திசையானது என்னதான் யோகம் பெற்ற கிரகத்தின் திசையாக இருந்தாலும் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய தடைகள் ஏற்படுகிறது. 3&வது திசையானது தொழிலில் முன்னேற்றம் தராது என்றாலும், தனித்து செயல்படாமல், யாருடனாவது கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் போது ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

என்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்க முடியாமல் போகும். ஆனால் ஒரு சிலருக்கோ தொழில் மூலம் அபரிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன் மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள் சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தோமேயானால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் திசைகள் நடைபெறும் போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம், தொழில் ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது திசை நடப்பில் இருப்பவர்கள் தொழிலில்  பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை.

எனவே, தொழில் ரீதியாக ஒருவர்  முன்னேற்றமடைய வேண்டுமானால் என்னதான் யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசா புக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.


ஒரு சிலர்  படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே?

 ஒருவரது ஜாதக அமைப்பில் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் 2வது இடம் ஆரம்பக் கல்வியும், 4ஆம் இடம் உயர்கல்வியும், 9வது இடம் மேல்நிலை (பல்கலை, கல்லூரி) கல்வியும் குறிப்பதால் இங்கே குறிப்பிட்ட மூன்று இடங்களும் செம்மையாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய வீடுகளுக்கு உரிய கிரகங்களைத் தாண்டி புதன், சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். தேக்கி வைப்பது (அறிவாற்றல்) சந்திரன் என்றால் அதனை தக்க சமயத்தில், தக்க முறையில் வெளிப்படுத்துவது புதன்.ஆரம்பத்தில் என்ன தசை நடக்கிறது. அடுத்து என்ன தசை வரப்போகிறது என்று ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு படிக்கும் துறையைத் தேர்வு செய்தால் மனதில் தடுமாற்றம் ஏற்படாது.
ணவர்கள் மீது பெற்றோர் தங்களின் விருப்பத்தை திணிக்கக் கூடாது. அதேபோல் மாணவர் ஒரு துறையில் சாதிக்க விரும்பினால் அத்துறையில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகளை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டு செயல்படலாம்.

.குழந்தைகளைப் பொறுத்த வரை என்னென்ன தசை நடக்கிறதோ அப்போது குறிப்பிட்ட துறையில் சாதிப்பார்கள். ஆனால் அந்த தசை முடிந்தவுடன் அதில் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.ஒரு சிலருக்கு மட்டுமே வேறு வேறு தசைகள் வந்தாலும் தொடர்ந்து ஒரே துறையில் சாதிக்கும் கிரக அமைப்பு இருக்கும். உதாரணமாக ஒரு ஜாதகருக்கு சுக்கிரன் தசை முடிந்து சூரிய தசை வரும் போது, சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் அமர்ந்தால், சுக்கிரனின் சேர்க்கை அல்லது பார்வை சூரியன் மீது இருப்பதால் அவர்கள் கலை ஆர்வம் மேலும் தொடரும்.உதாரணமாக கலைத்துறையில் எடுத்துக் கொண்டால் ஒரு சில இசையமைப்பாளர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை வாரி வழங்குவர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவர்கள் இருக்கும் இடம் தெரியாது. இதெல்லாம் தசா புக்திகளின் மாற்றம்தான்.


கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு? 

கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு .

----------------------------


ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் உத்தியோகம் தொழிலைக் குறிக்கும் இடம் ஆகும். இன்றைய காலக் கட்டத்தில் உத்தியோகம் புருஷ லட்சணம் ஆகும். யார் யாருக்கு அரசாங்க உத்தியோகம் அமையும் அல்லது சொந்தத் தொழிலா என்பதைப்பற்றி பார்ப்போம்.
பத்துக்கு உடையவனைச் சூரியனும், சந்திரனும் பார்த்தால் அரசாங்க உத்தி யோகம் பார்ப்பான்.
பத்தாம் அதிபனோடு சூரியனும், சந்திரனும் கூடினாலும் அரசாங்கம் உத்தியோகம் பார்ப்பான்.
பத்தாம் அதிபன் சூரியன் வீட்டில் அல்லது சந்திரன் வீட்டில் நின்றால் அர சாங்கம் உத்தியோகம் பார்ப்பான்.
பத்தாம் அதிபன் செவ்வாயோடு சேர்ந்தால் ராணுவத்தில் உத்தியோகம் பார்ப்பான்.
பத்தாம் அதிபன் புதனோடு சேர்ந்தால் ஜாதகன் தன் மனைவியின் சம்;பாத்தியத்தினாலோ, புதல்வியின் சம்பாத்தியத்தினாலோ வாழ்க்கை நடத்துவான். அல்லது கணக்குப் பிள்ளையாக இருப்பான்.
பத்தாம் அதிபன்; குருவோடு சேர்ந்தால் சாஸ்திரபுராணங்களை உப தேசிப்பவனாகவோ அல்லது ஒரு பெரிய ஆசிரியனாகவோ இருப்பான்.
பத்தாம் அதிபன் சுக்கிரனோடு சேர்ந்தால் கிட்டத்தட்ட மேலே உள்ள பலன் கள்தான் நடைபெறும்.
பத்தாம் அதிபன் சனியோடு சேர்ந்தால் திருடனாய் இருப்பான். பத்தாம் அதிபனுடன் செவ்வாய், இராகு கேதுக்களும் கூடி ஆறில் நின்றால் தன் மனைவியின் சம்பாத்தியங்களைக் கொண்டு வயிறு வளர்ப்பவனாய் இருப்பான்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி இவ்வைந்து கிரகங்களும் ஒன்றுகூடி நின்றால் மரம் வெட்டி விற்பான்.
செவ்வாய், குரு, சுக்கிரன் இம்மூவரும் ஒன்றுகூடி நின்றால் கணக்கு எழுதிப் பிழைப்பான். துக்கம் உள்ளவனாய் இருப்பான்.
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு இவ்வைந்து கிரகங்களும் ஒன்று கூடி நின்றால் மந்திர வித்தைகளைச் செய்து வயிறு வளர்ப்பான்.
இரண்டு அல்லது ஒன்பது அல்லது பதினோராம் அதிபதி குருவாக இருந்தால் சகல பாக்கியங்களும் உடையவனாக இருப்பான்.
இரண்டு அல்லது ஒன்பது அல்லது பதினோராம் அதிபதி சுக்கிரனாக இருந் தால் நிலபுலன்களை மிகுதியாக உடையவனாக இருப்பான்.
இரண்டு, ஒன்பது அல்லது பதி னொன்றின் அதிபதி சனியாய் இருந்தால் அல்லது இந்த இடங்களில் ராகு நின்றால் திருடியோ அல்லது மோசமான தொழிலைச் செய்தோ வயிறு வளர்ப்பான்.
சூரியன், சந்திரன், ராகு, கேது இந்நால்வரைத் தவிர மற்ற கிரகங்கள் ஒன்று கூடினால்தானே வெட்கப்படக்கூடிய தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்துவான்.
கேந்திரத் திரிகோணங்களில் அல்லது எட்டாம் இடத்தில் சந்திரனும், சுக்கிரனும் கூடி நின்றால்தான் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துவான். அதேபோல் ஒன்பதாம் பாவம் பற்றி பார்ப்போம்.
ஒன்பதாம் இடத்திற்கு பாக்கியஸ் தானம், பிதுர்ஸ்தானம், தர்மஸ்தானம் என்ற பெயர்களும் உண்டு.
லக்னத்திற்கு ஐந்து ஒன்பதாம் இடங்களில் சூரியன், செவ்வாய், சனி இவர் களில் யாரேனும் ஒருவர் இருந்தாலும் ஜாதகனுடைய தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாயும், ஏழில் சூரியனும் இருந்தால் தந்தை பிழைப்பது சந்தேகம். இவர்களில் ஒரு வருடன் குருவும் கூடியிருந்தால் தந்தை ஒரு சில ஆண்டுகள் உயிர் வாழ்வார். ஒன்பதில் சனியும், கேந்திரத்தில் செவ்வாயும் இருந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.
சூரியனுக்கு ஏழில் சனியும், செவ்வாயும் இருந்து சுபக் கிரகங்களால் பார்க்கப்பட்டால் தந்தைக்கு அதிர்ஷ்டம். லக்னத்தில் செவ்வாயும், ஒன்பதில் சனியும் இருந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.
சூரியனுக்கு முன்னும் பின்னும் பாவிகள் இருந்தாலும், பார்த்தாலும் ஜாதகன் பிறப்பதற்கு முன்னமேயே அவன் தந்தை இறந்து விடுவான். ஒன்பதாம் அதிபனுடனும் குருவும் பாவிகளும்கூடி நின்றால் பிச்சை எடுத்து உண்பான்.

----------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாம் இடம் தரும் கல்வி ஒன்பதாம் இடம் தரும் உயர் கல்வி 
-----------------------------------------------------------------------------------------------------------------


கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வி செல்வம் அழியாதது. பிறரால் களவாட முடியாதது. கல்வி அறிவு இருந்தால் எங்கு சென்றாலும் அதனால் மதிப்பும், மரியாதையும் உயரும். எங்கு யாரிடத்தில் எப்படிப் பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற ஆற்றல் உண்டாகும். ஆயிரம் கோவில்கள் கட்டி, அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதை விட ஒரு கல்விச்சாலை அமைத்து பலருக்குக் கல்வி அறிவு புகட்டுதல் மிகவும் சிறப்பானதாகும்.
கல்விச் சிறப்பு அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஜோதிட ரீதியாக ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகத்தில் 5ம் பாவத்தைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

கற்றறிந்த சான்றோர்களால் இயற்றப்பட்ட பல நூல்கள் நமக்கு இன்றும் பலவகையில் உதவிகரமாகவும், அறிவுக்கு விருந்தளிப்பதாகவும் அமைந்துள்ளது. இதற்கு 5ம் பாவம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 5ம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை சேர்க்கையுடன் இருந்தாலும், 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் வாய்ப்பும், நல்ல அறிவாற்றல் யாவும் சிறப்பாக அமையும்.


பொதுவாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2ம் பாவமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். கல்வி என்பது இன்றைய விஞ்ஞான யுகத்தில் மிகவும் முக்கியம் என்றாலும் படிப்பது முக்கியமில்லை. மிக சிறப்பாக படிப்பது தான் முக்கியம். இதற்கு 5ம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப்பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம்  இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனைகள் பல செய்ய நேரிடும்.

5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் 5ம் அதிபதி கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்ய நேரிடும்.

2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும்.

அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது.  சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும்.
5ம் பாவத்தில் கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் உயர்படிப்பு யோகம், அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப அமையும்.

பொதுவாக, 5ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று, உடன் செவ்வாய் அமையப் பெற்றோ, பலன் பெற்றோ இருந்தால் மருந்து, அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சாதனை செய்ய நேரிடும். அதுவும் சூரியன், செவ்வாய் பலம் பெறுவதுடன் உடன் மருத்துவ கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

5ல் சந்திரன்  வலுப்பெற்றால் மருந்து, கேட்டரிங், கடல் சார்புடைய படிப்பில் சாதிக்க முடியும்.

செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 5ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்க முடியும்.

செவ்வாய் 5ல் பலமாக இருந்தால், நிர்வாகம் சார்ந்த எம்.பி.ஏ. படிக்க முடியும்.  செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் கட்டடத்துறை சார்ந்த துறை, எந்திரம் சார்ந்த துறையில் உயர்கல்வி கற்கக்வடிய யோகம் உண்டாகும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கம்ப்யூட்டர் துறையில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் புதன் பலம் பெற்றால் கணக்கு கம்ப்யூட்டர், ஆடிட்டிங் சார்ந்த துறைகளில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் குரு பலம் பெற்றால் வங்கிப் பணிக்கான  கல்வி, வக்கீல், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழி நடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குரு, புதன் இணைந்திருந்தால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து, பள்ளிக் கல்லூரிகளில்  ஆசிரியர், பேராசிரியர் ஆகும் யோகம் உண்டாகும்.

சனி பலம் பெற்றால் டெக்னிக்கல் கல்வி உண்டாகும்.

சுக்கிரன் பலம் பெற்றால் கலை, இசை தொடர்புடைய கல்வியில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

ராகு பகவான் 5ல் சுபப் பார்வையுடன் பலம் பெற்றால் புதுவகையான கல்வியில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் ஆற்றல்  உண்டாகும்.

5ல் கேது அமையப் பெற்றால் மருந்து, கெமிக்கல்  சார்ந்த கல்வி, சமயம் சார்ந்த கல்வியில் சாதிக்க நேரிடும்.

எனவே, ஒருவருக்கு 5ம் இடம் பலமாக அமைந்து விட்டால் நல்ல கல்வி ஞானம் கிடைக்கப் பெற்று, சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும், மதிப்பு மரியாதையையும் பெறமுடியும். நல்ல நிர்வாக திறமையும், பலரை வழி நடத்தக்கூடிய அறிவாற்றலும் உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகமும் உண்டு. கல்வி ஒருவருக்கு வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே வாழ்வில் அனைவரும் கண்டிப்பாக முன்னேறுவோமாக!

-------------------


பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :-
லக்னத்தில் - சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் , ஆசாரமுடையவராகவும்
- புதன் இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
- குரு இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
- சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .

இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
- புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
- குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.

மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
- குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
- சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் , சனிபலம் பெற - ஞானம் உண்டு .
- கேது இருக்க ஞானம் , வித்தை யுடையவனாகவும் இருப்பர் .

ஐந்தில் சந்திரனிருக்க நற்ப்புதியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
- புதனிருக்க ஞானவிருத்தி , நர்கல்வியாலனாகவும் .

-குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .

ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
- குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .

பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,
- கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .

பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்
- கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .

பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-

----------------------------------------------------------
லக்னாதிபதி பலம்பெற்று 2 ல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார் லக்னாதிபதி 4 ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் . இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் . இரண்டாம் அதிபதி முன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பமுடையாதவனாகவும் இருப்பான் . இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராயிச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான் முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம் ,நாட்டியம்,சங்கிதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் . நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 4 ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும். ஐந்தாமதிபதி 5 ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாமதிபதி 6 ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 9 ல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு . பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் . பத்தாமதிபதி 2 ல் (பலம்) வாக்குவன்மை , பேசுந்திரன் இருக்கும் . பத்தாமதிபதி 5 ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் . பன்னிரெண்டாம் அதிபதி 2 ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .

கிரக இணைவு பலன்கள் :

கல்வி பற்றி அறிய 2,4,5,11 ம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் . இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . 2 ம் பாவம்-ஆரம்பக்கல்வி

4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11 ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் - ராகு கேது தொடர்பு .

4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி , சிம்மம் , விருச்சிகம் , மீனம் லக்னம் ) - மருத்துவ கல்வி
குரு இணைய = பொது மருத்துவர்

புதன் இணைய = நரம்பியல் நிபுணர்

செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்

சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்

சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்

சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்

சுக்கிரன் + ராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்

குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்

குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்

சூரியன் + குரு = சித்த வைத்தியர்

சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி

சூரியன் + புதன் = விஞ்ஞானி , நிபுணத்துவம்

10 மிடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்

10 மிடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்

10 மிடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .

6,8,12 ல் ராகு இருந்து ராகு திசையில் படிப்பே வராது .

சந்திரன் + ராகு = நல்ல படிப்பு வரும் .

புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .

2,5,11 சம்பந்தம் - முதுநிலை பட்டம் .

2 மிடம் - பள்ளிபருவம்

4 மிடம் - இளங்கலை , பட்டயப்படிப்பை குறிக்கும் .

2,9,11 - பி , எச் , டி

2,11 - ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்

எந்த நிலைக்கு , என்ன படிப்பு ஏற்படும் ?

1 . மேஷம் , விருச்சிகம் , செவ்வாய் , சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்

2 . மிதுனமும் , செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்

3 . புதன் , குரு , மிதுனம் , விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்

4 . காற்று ராசிகளான மிதுனம் , துலாம் , கும்பம் , சூரியன் , குரு , புதன் , ஏரோ நாட்டிக்கல் , ஏவியேஷன் துறை

5 . மீனம் , தனுஷு குரு + சந்திரன் - சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி

மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - செவ்வாய் தொடர்பு = கடற்படை

மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்

6 . புதன் + குரு - பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )

7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்

8 . சுக்கிரன் + சூரியன் - குரு தொடர்பு = சினிமாத்துறை

9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் - சனி தொடர்பு = பொறியியற்கல்வி

10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு , ஆசிரியர் கல்வி

11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு - சட்டப்படிப்பு

13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)

- புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .

- புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 ல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .

- புதன் பலத்துடன் இருந்தாலும் , லக்னாதிபதி பலமற்று 11 ல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்

- ரிஷபம் , துலாம் , மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .

- மிதுனம் , கன்னிக்கு - நன்மை , தீமை கலந்து தரும் கிரகமாகும் .

- கடகம் , மீனம் , தனுஷு , விருச்சிகம் , சிம்மம் , மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .

கைரேகை சாஸ்திரம் :-

புதன் மேடு வனமாக இருக்க , கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) - மேடைப் பேச்சாளராகவும் , சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்க கலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .

கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து , புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :

அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ' ஈசானன் ' ஆவான் .

நாடி ஜோதிடம் :-

மேஷத்தில் புதன் :-

(புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை

ரிஷப புதன் :-

(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .

மிதுன புதன் :-

கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .

கடக புதன் :-

கலை , இலக்கியம் , மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )

சிம்ம புதன் :-

அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .

கன்னி புதன் :-

கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .

துலா புதன் :-

வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .

விருச்சிக புதன் :-

(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .

தனுஷு புதன் :-

(குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்

மகர புதன் :-

(சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .

கும்ப புதன் :-

(சனி + புதன் ) மணவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .

மீன புதன் :-

(குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

2 comments :

  1. Nice Post !!! if i share my Horscope Box , Will u analysis my details ? in Blog

    ReplyDelete
  2. My son's education & career-13.08.1997-10.23Pm Coimbatore Kettai. Wednesday please tell me sir

    ReplyDelete