01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

கேது


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:

கேது தேவே கீர்த்தி திருவே

பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்

வாதம் வம்பு வழக்குகளின்றி

கேது தேவா கேண்மையாய் ரட்சி

KETU: Doctor, priest, fisherman, weaver, tailor, knitters, astrologers, occultist, snake charmer, faith healers, pranic healers, divine healer, preceptors, hunters, beggars, sages, saints, yogis, siddhas, fakirs, wire man, dealing with natural herbs, pottery, tiles and brick manufacturing.

கேதுவும் சூரியனும் சேர்ந்திருந்தால் கிடைக்கும் பலன்கள் அல்லது நடக்கும் தீமைகள்! ஆமாம், இருவரும் சேர்ந்திருந்தால் நன்மைகள் அதிகம் இல்லை. தீமைகளே அதிகம். ஜாதகத்தில் கேது சூரியனை விடுத்துத் தனித்திருந்தால் சந்தோஷப்படுங்கள் சூரியன் உடல் காரகன் அதோடு தந்தைக்கும் காரகன். அவனோடு சேரும் கேது நல்ல ஆரோக்கியமான உடம்பைக் கொடுப்பதில்லை. அதோடு நல்ல ஆதரவான தந்தையையும் ஜாதகனுக்குக் கொடுப்பதில்லை
நோய்களுக்குக் காரணம், ஆறாம் வீடும் அதன் அதிபதியும்தான் என்கின்றன பல ஜோதிட நூல்கள். அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். நம்புவோம். ஒருவருக்கு சயரோகம் (tuberculosis) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது ஒட்டிக்கொள்ளூம் நோய் என்கிறது விஞ்ஞானம் (tuberculosis is a communicable and infectious disease) ஆனால் அந்த நோயாளியுடன் சேர்ந்து வாழுகின்ற கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அந்த நோய் வருவதில்லை. அங்கேதான் ஜாதகம் நிற்கும்! ஒரு வீடும், அதன் அதிபதியும், தீய கிரகங்களால் பார்க்கப் பெற்றால், அந்த அதிபதிக்கு உரிய உடல் உறுப்பு அல்லது உடல் அப்பகுதி எதுவோ அது பாதிக்கப்படும் அல்லது அதில் அடிக்கடி நோய் உண்டாகும்.

மேஷ லக்கினக்காரர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆறாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதன். அந்த வீடு தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் ஜாதகனுக்கு ஹெர்னியா வியாதி வந்து அவதியுறுவான் (இந்த வியாதிக்குச் சரியான தமிழாக்கம் இருந்தால், யாராவது சொல்லுங்களேன். குடல் இறக்கம் என்று ஒருமுறை படித்திருக்கிறேன். அந்தப் பெயர் சரிதானா என்று தெரியவில்லை!)

சிம்மமும், அதன் அதிபதி சூரியனும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் கல்லீரல் (liver) கோளாறுகள் ஏற்படும் மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய். செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்

ஆறாம் வீடு, அதன் அதிபதி என்கின்ற கணக்கின்றி சூரியனுடன் சேர்கின்ற கேதுவும் அதே வேலையை அதே பலனைச் செய்யக்கூடியவன் ஆவான். சூரியன் உடல்காரகன் (Authority for body) அவனுடன் கேது சேர்வது விரும்பத்தக்கதல்ல! அவர்கள் இருவரும் சேர்ந்து சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை என்றால் ஜாதகனுக்கு உடற் கோளாறுகள் ஏற்படும். அது உடலின் எந்தப் பகுதி என்பது, லக்கினத்தில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும் வீட்டைப் பொறுத்ததாகும். லக்கினத்தில் என்றால் தலையில் கட்டிகள் ஏற்படும், மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்குப் பக்கவாதம் ஏற்படலாம். இவ்வாறு தலை சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். இரண்டில் என்றால் கண்களில் கோளாறு ஏற்படும். கண்ணில் கட்டிகள், கண்பார்வைக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நான்கில் என்றால் இருதயக் கோளாறுகள் ஏற்படும் எட்டில் இருந்தால் மறைவிடங்களில் கட்டிகள் ஏற்படும். சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும். இவ்வாறாக அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளில் அவற்றிற்கு உரிய பகுதிகளில் நோய்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும். அவைகள் என்னென்ன பகுதிகள் என்பதை முன் வரிகளில் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பதற்கு உகந்த ஒரே இடம் பதினொன்றாம் வீடு. ஜாதகனின் பின் வாழ்க்கை யோகமாக இருக்கும். செளகரியமாக வாழ்வான். இந்த பாதிப்புக்கள் கேது அல்லது சூரியனுடைய Major Dasa or Sub-period களில் உண்டாகும். அஷ்டகவர்கத்தில் அந்த வீடு அதிகப் பரல்களைப் பெற்றிருந்தாலும் அல்லது சூரியன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு மேற்கூரிய பாதிப்புக்கள் இருக்காது.

ஞானத்தைத் தருவது கேது! சிலருக்குச் சின்ன வயதிலேயே அவர் ஞானத்தைத் தருவார். சிலருக்கு நடு வயதில் தருவார் சிலருக்கு வயதான பிறகு தருவார் சிலருக்குக் கட்டையில் போகிற வயதில் தருவார். சிலருக்குத் தராமல் விட்டு விடுவார். அவனுக்கு அது carry forward ஆகும் அதாவது அடுத்த பிறவியில் கிடைக்கும். சும்மா கிடைக்காது. Right from the birth அடித்துத் துவைக்கப்பட்டுக் கிடைக்கும். கிடைக்கும். கிடைத்துக் கொண்டே இருக்கும்
முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர் கேது. இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவிக்க முடியமா என்று தெரியவில்லை.ஆகவே இன்னுமொரு பிறவியிருந்தால் நல்லது என்று நினைப்பவர்கள் கேதுவை வணங்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. பாதையில் பல தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி, பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர் அவர். முன் ஜன்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர். கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். அவருடைய திசா புத்திகளில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அனேகமாக அது நெருப்பு சம்பந்தப்பட்ட விபத்தாக இருக்கும். நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர். சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச் செய்யக்கூடியவர். கேது ராகுவைப் போன்றவர். பல செயல்களில் அவரை ஒத்திருப்பார். சொந்த வீடு இல்லாதவர். இருக்கின்ற வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வார். ராகு சனியைப் போல செயல் படக்கூடியவர் என்றால், கேது செவ்வாயைப் போல செயல்படக்கூடியவர்.

பல சமயங்களில் கேது, செவ்வாயின் எதிர்மறையான செயல்களைப் போல தீயவற்றைச் செய்யக்கூடியவர் (Ketu in certain way resembles Mars. But many times,activates only the negative side of Mars)

மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

The two imaginary nodes (சாயாக் கிரகங்கள்) Rahu and Ketu are the mysterious forces and show in the birth chart both karmic and spiritual influences. Like Rahu, Ketu is also not a real luminary and therefore doesn't rule any zodiac sign. (சொந்த வீடு இல்லாமல் போனது)

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

1ல் லக்கினத்தில் கேது ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும் மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள் சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்

2ல் இரண்டில் கேது! ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான். குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான். குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும் சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.

3ல் மூன்றில் கேது. ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன். சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன். செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.

4ல் நான்கில் கேது இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல! நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம் என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது. ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும். சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.

5 ஐந்தில் கேது ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன் இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது. இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக மாறிவிடும்.

6 ஆறில் கேது ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில் தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும். வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

7 ஏழில் கேது ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது. மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன் இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது கணவன் அமையக்கூடும்

8 எட்டில் கேது ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன் சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம் சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள். சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.9 ஒன்பதில் கேது ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன். சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில் ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான். சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்

10 பத்தில் கேது மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும். சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன் உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services, time and/or effort to support a socially beneficial cause, with a defined objective and with no financial or material reward to the donor. In a more general sense, activity intended to promote good or improve human quality of life. ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான். திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும். This is the best place for professional enhancement.

11 பதினொன்றில் கேது ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம் படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான் பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும் நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்

12 பன்னிரெண்டில் கேது இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம். ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும் பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன். சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்

இங்கே எழுதப்பெற்றுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களினால் இவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம். அதைக் கவனத்தில் கொள்ளவும்!

5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.

7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.

8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.

9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.

ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு.

களத்திரம் = திருமணம்

புத்திரம் = குழந்தைப்பேறு

திருமணம் தாமதமாவது அதாவது தள்ளிக்கொண்டே போகிறதென்றால், உரிய காலத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதன் பின்னணியில் அவர்கள் இருவரில் ஒருவர் இருப்பார்திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்! ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம் நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள் சாமிகளா) அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்! அந்தத் தாமதம் தோஷம் எனப்படும். அதீத தோஷமென்றால் என்ன ஆகும்? அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி, இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும் திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு! தோஷத்திற்கு என்ன பரிகாரம்? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம். ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!


கேதுவுடன் சனி சேர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில் லக்கினம் என்பது தோற்றம், உடல் சம்பந்தப்பட்ட இடம். இங்கே இந்த வில்லன்கள் இருவரும் இருப்பது நல்லதல்ல. உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். இங்கே கேதுவுடன் சேரும் சனீஷ்வரன் வக்கிரகதியில் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் The native will suffer with chronic diseases

2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால் கையில் காசு தங்காது. எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது. அதற்குமேல் செலவு உண்டாகும். பூர்விக சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் கரைந்துவிடும

3ல் அதாவது மூன்றாம் வீட்டில் இருந்தால் உடன்பிறப்புக்களால், குறிப்பாக சகோதரர்களால் ஜாதகனுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொல்லைகள் அதிகமாக இருக்கும். There won't be cordial relationship!

4ல் அதாவது நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகரின் நடத்தை சரியாக இருக்காது. மெச்சும்படியாக இருக்காது. அவரைச் சூழ்ந்திருப்பவர்களுக்கு, அவரால் நன்மைகள் எதுவும் இருக்காது. மேற்கொண்டு ஜாதகனால், அவனுடைய குடும்பத்தினர்களும், நண்பர்களும் அவதிப்படவே நேரிடும். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான். யாருக்கும் கட்டுப்படாதவளாக இருப்பாள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மட்டுமே அதற்கு விதிவிலக்காகும். அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.

5ல் அதாவது ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு இல்லற வாழ்வில் அக்கறை இருக்காது. எதிலும் பிடிப்பு இருக்காது துறவு மனப்பான்மை மேலோங்கியிருக்கும். புராணங்கள், வேதங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். சிலர் மடங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்கள்

6ல் அதாவது ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் ஏமாற்றம், திருட்டு, துரோகம் என்று பலவழிகளிலும் தன் பொருட்களை செல்வத்தைப், பணத்தைப் பறிகொடுக்க நேரிடும். அல்லது இழக்க நேரிடும். சிலருக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டு, உடல் செயல் இழந்து போகும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூரிய தொல்லைகள் இருக்காது. ஜாதகன் பொதுச் சேவைகளில் ஈடுபடுவான். இந்த அமைப்பு பன்னிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பலவிதமான விரயங்களும் ஏற்படும்.

7ல் அதாவது ஏழாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் அதீதமான உடல் இச்சைகளை உடையவன். பல பெண்களிடம் உறவு கொள்வான். உறவுமுறைகள், வயது முறைகள் எதுவுமின்றி உறவு சொள்வான் சிலர் தங்கள் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். இளமையிலேயே வயதான தோற்றம் உண்டாகும். இந்த அமைப்பு லக்கினத்தைப் பார்ப்பதால் அந்த நிலை உண்டாகும்

8ல் அதாவது எட்டாம் வீட்டில் இருந்தால் இந்த அமைப்பினால், எட்டாம் வீட்டிற்கும் பாதிப்பு, அதே நேரத்தில் இவர்கள் இருவரின் பார்வையினால் இரண்டாம் வீட்டிற்கும் பாதிப்பு. ஜாதகருக்குப் பல தடைகள், செயல்பாடுகளில் அவதிகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும். இறுதியில் ஜாதகர் பெரிய ஞானியாகிவிடுவார். அது ஒன்றுதான் நன்மை ஞானம் பெறுவது நன்மைதானே?

9ல் அதாவது ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தீவிர இறை நம்பிக்கைகளை உடையவாராகி விடுவார். பல இறைப் பணிகள், மற்றும் அறப்பணிகளை மேற்கொள்வார். பாதி நாட்கள் கோவில் குளம், புனித நதியில் நீராடுதல் என்று ஊர் ஊராகச் சுற்றுவார்

10ல் அதாவது பத்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறித் துறவியாக வாழ்வார். ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பெரிய பேச்சாளராக அல்லது மத போதகராக அல்லது இறையடியாராகத் தன் வாழ்நாட்களைக் கழிப்பார்.

11ல் அதாவது பதினொன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் துறவு மேற்கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபடுவார். புகழ் பெறுவார் நாடறிந்த துறவியாக இருப்பார். தனக்குத் தெரிந்த நல்வழிகளைப் பிறருக்குச் சொல்லும் வாழ்க்கையை மேற்கொள்வார்

12ல் அதாவது பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் உடல் வியாதிகள், சிறைவாசம், தனித்த வாழ்க்கை என்று ஜாதகனின் வாழ்க்கை மகிழும்படியாக இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் இதுவே அரங்கேறும். வயதான காலத்தில் தன் சொந்த ஊரைவிட்டு வெளி இடங்களில் வாசம் செய்ய நேரிடும்

கேது திசைப் பலன்கள். முன் பாடத்தில் விவரமாக உள்ளது. அதைப் படியுங்கள் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காகக் கீழ் கொடுத்துள்ளேன் கேதுவின் மகா திசையில், குரு புக்திக் காலம் (sub period of Jupiter) 11மாதம் 6 நாட்கள் மற்றும் கேதுவின் மகா திசையில், புதன் புத்திக் காலம் (sub period of Mercury) 11 மாதம் 27 நாட்கள் ஆகிய நாட்கள் மட்டுமே நன்மையாக இருக்கும். அதாவது ஏழாண்டு காலப்பலனில் சுமார் இரண்டாண்டு காலம் மட்டுமே நன்மை பயக்கூடியதாக இருக்கும்

கேதுவின் கோச்சாரப் பலன்கள். அதாவது கோள்சாரத்தில், தனது சுற்றில் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் காலத்தில் கேதுவால் உண்டாகும் பலாபலன்கள். கோள்சாரம் சந்திர ராசியை வைத்துத்தான் கணக்கில் வரும். அதை நினைவில் கொள்க! 1ல்: * Loss, ill-health or disease 2ல்: * Loss of money 3ல்: * Happiness, gain, increase 4ல்: * Fear, trouble both physical or mental 5ல்: * Sorrow, loss of money 6ல்: * Happiness, gain of money 7ல்: * Evil state of affairs, illness 8ல்: * Loss, threatened trouble 9ல்: * Sinful actions, humility 10ல்: * Fear, sorrow 11ல்: * Good name and fame, gain of money 12ல்: * Physical ill-health or mental distress, enmity

இங்கே கூறியிருப்பவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து, இவைகள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

கேது & குரு

கேது & குரு குரு தன்னுணர்விற்கு உரிய கிரகம். கேது தன்னைப்பற்றி முழுமையாக அறிவதற்கு உள்ள கிரகம். இரண்டும் சேரும்போது, ஜாதகன் மனித வாழ்வின் அமைப்பையும், மனித வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக உணர்வான். அதாவது அவனுக்கு ஞானம் கிடைக்கும். இறுதியில் பிறப்பிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவான். சில ஜாதகர்களுக்கு இதே கூட்டணி (குரு வக்கிரம் பெற்று இருப்பின்) சமுதாயத் திற்கு எதிரான சிந்தனையை ஜாதகனுக்குக் கொடுக்கும். போதைப் பொருட் களுக்கு அடிமைப்படுத்தும், கீழானவர்களுடன், தீய சக்திகளுடனும் ஜாதகனுக்குப் பழக்கத்தை உண்டு பண்ணும். 1, 4, 5, 9 or 12 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி அமைவது நல்லது. எட்டாம் வீட்டில் இக்கூட்டணி இருப்பது மட்டும் நன்மை இல்லை. எட்டாம் இடத்துக் கூட்டணி ஜாதகனுக்கு பல நோய்களை உண்டாக்கக்கூடும். 2,3,6,10 or 11 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி இருந்தாலும் ஓரளவிற்கு நன்மை செய்யும். தீமை இல்லை! 7ல் இருப்பது சராசரி. நல்லதும் கெட்டதும் கலந்தது.

கேது & சுக்கிரன்

கேது & சுக்கிரன் venus & ketu have opposite gunas and on physical level, ketu does hammer (curtail) venus's natural significations. சுக்கிரன் கேது கூட்டணி 1ல் இருந்தால் ஜாதகனுக்கு இல்லற வாழ்வில், குறிப்பாக மனைவியால் பிரச்சனைகள் உண்டாகும். சுக்கிரன் கேது கூட்டணி

2ல் இருந்தால் ஜாதகனுக்கு இரு தாரங்கள் அமையும். இரண்டு குடும்பங்கள் அமையும். இரண்டு குடும்பங்களிலும் மாட்டிக்கொண்டு, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவான். சுக்கிரன் கேது கூட்டணி

3ல் இருந்தால் ஜாதகன் செய்யக்கூடாத செயல்களைச் செய்துவிட்டு அடிக்கடி அவதிப்படுவான். இந்த அமைப்பிலுள்ள சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட நேரிடலாம். அது என்ன சிலர்? சரியாகச் சொல்லுங்கள்! அதாவது இந்தக் கூட்டணி 3ல் இருக்க லக்கினாதிபதி வீக்காக இருப்பவர்கள் மட்டும்தான் அந்தச் சிலர். போதுமா? சுக்கிரன் கேது கூட்டணி

4ல் இருந்தால் ஜாதகனின் நடத்தைகள் சரியாக இருக்காது. அவனுடைய நட்புகளும் சரியாக இருக்காது. சுக்கிரன் கேது கூட்டணி

5ல் இருந்தால் ஜாதகன் காதல், கத்திரிக்காய் என்று அலைந்து துன்பப்படுவான். திருப்தியான காதலி கிடைக்க மாட்டாள். எவளையாவது காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டு அவள் கையால் நித்தமும் அடி வாங்குவான். சுக்கிரன் கேது கூட்டணி

6ல் இருந்தால் ஜாதகனுக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்கள் அல்லது விதவைகள் போன்றோருடன் முறையில்லாத உறவுகள் ஏற்படும். 'அந்த' விஷயத்தில் ஜாதகன் அவதிப்படவே பிறந்தவன். சுக்கிரன் கேது கூட்டணி

7ல் இருந்தால் ஜாதகனுக்கு அவன் மனைவியுடன் ஒத்துப்போகும் வாழ்க்கை அமையாது. விவகாரமான, வில்லங்கமான வாழ்க்கை அமையும். சுக்கிரன் கேது கூட்டணி

8ல் இருந்தால் ஜாதகன் சொத்து, சுகங்களை இழந்து அவதிப்பட நேரிடும். வண்டி வகனங்களைத் தொலைத்துவிட்டு நடந்துபோக நேரிடும். அவைகள் இருந்தாலும், நிம்மதி இருக்காது. +++சுக்கிரன் கேது கூட்டணி

9ல் இருந்தால் ஜாதகனுக்குப் பல யோகங்கள் உண்டாகும். ஜாதகனுக்கு அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும். +++சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான். +++சுக்கிரன் கேது கூட்டணி

11ல் இருந்தால் ஜாதகன் மருத்துவத்துறையில் அல்லது ரசாயனத்துறையில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவான். சுக்கிரன் கேது கூட்டணி

12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் எதிரிகளாக இருப்பார்கள்.

புதனுடன் +கேது

புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்: இன்றையப் பாடம் அதுதான் சுவாமி! பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும். The native will get positive reults தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல! புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால் ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன் யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான். எல்லோருமே அப்படியா? இல்லை! வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன் சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும் சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத் தராது. உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும் கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும் அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல் உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக் கைவிட நேரிடும். வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை இருக்காது

இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில், வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில் வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே! வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம்

இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும் It is called as house of finance இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம் அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. 20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம் நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம் செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான் அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான். பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன் திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும் குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான். எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள் மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது 730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார். அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்? சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே? வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே? அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம் தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார். அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார். அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்! இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்! சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.

இதே பரல்களை வைத்து ஒருவருடைய பத்தாம் வீட்டையோ அல்லது ஏழாம் வீடையோ அலசலாம். அதை எல்லாம் வேறு ஒரு தலைப்பில் தனியாக எழுத உள்ளேன். அப்போது பார்ப்போம்

புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

கேது செவ்வாய் கூட்டணி

கண்கள் இரண்டு இருந்தாலும் இரண்டு காட்சிகளா தெரியப்போகிறது? ஒரு காட்சிதானே காணக் கிடைக்கும்!

அதுபோல இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில் கூட்டாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன் அந்த கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்ப ஒன்று நல்லது அல்லது மிக நல்லது, கெட்டது அல்லது மிகவும் கெட்டது என்று ஒரு விதமான பலன்தான் கிடைக்கும். அந்த வீட்டின் மீது சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் மட்டுமே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்

கேதுவும் செவ்வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சக்திகளும் செயல்பாடுகளும் கொண்டவைகளாகும். அவை இரண்டும் சேர்ந்து எதிர்மறையாக செயல் பட்டால் ஜாதகன் கோபக் காரனாகவும் ஆத்திரக்காரனாகவும் மேலும் சிலர் மூர்க்கத்தனம் மிகுந்தவர் களாகவும் இருப்பார்கள். பிடிக்காதவற்றை ஒழிக்கக்கூடிய மனப்பான்மை இருக்கும். விபத்துக்கள், காயங்கள் ஏற்படும். இரண்டும் நேராகச் செயல்பட்டால், ஜாதகன் உயந்த நோக்கம், மற்றும் லட்சியங்கள் உடையவனாகவும், அதற்காகப் பாடுபடுவனாகவும் இருப்பான். துணிச்சல் மிகுந்தவனாக இருப்பான். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து செயலாற்றுபவனாக இருப்பான்.

கேது செவ்வாய் கூட்டணி தொழில் நுட்பக் கல்விக்கு உகந்ததாகும்.

அதுபோல கணிதம் படிப்பவர்களுக்கும் அது உகந்ததாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது ஆகிய ஐந்து கிரகங்களும் தீய தன்மைகள் அதிகம் உடையவைகள். ஜாதகனின் 6ஆம் வீட்டில் அவைகள் இருப்பது நன்மை பயக்கும். பெண்களின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருக்க வேண்டும். வலிமை இழந்த குரு பொதுவாகப் பெண்களுக்கு மகிழ்ச்சியான திருமணத்தைக் கொடுப்பதில்லை. அதைவிட முக்கியமாக சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய நான்கும் 7ஆம் வீட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாது இருத்தலும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழி வகுக்கும்!கேதுவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள்: 1ல் நல்லதல்ல! The native should be careful. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும். அதனால் உடம்பு பாதிக்கப்படலாம். தீக்காயங்களால் உடம்பில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

2ல் Not a good place for this combination Expense oriented horoscope. ஜாதகனின் சொத்துக்கள் தீய வழிகளில் கரையும். படிப்பு தடைப்படடும். The native may become a school or college drop out!

3ல் The native will be courageious ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவனாகத் திகழ்வான். அடுத்தவர்களுக்குச் ஜாதகன் மேல் ஒரு பய உணர்வு இருக்கும் சிலர் அந்தத் துணிச்சலை நல்ல வழியில் பயன்படுத்துவார்கள் சிலர் அதே துணிச்சலைக் கெட்ட வழிகளில் பயன்படுத்துவார்கள்

4ல் The native will be conservative பழசையே பேசிக்கொண்டிருப்பான். எங்க தாத்தா காலத்தில் என்று ஆரம்பித்தால் விடமாட்டான். கேட்கிறவன் அவனாக ஓட்டம்பிடித்தால் மட்டுமே தப்பிக்கலாம். ஜாதகர் பழமையைப் போற்றுபவராக இருப்பார். கல்வியில் தடை ஏற்படும்

5ல் This place is called house of mind. This is also not a good place for this (ketu & Mars) combination அடிக்கடி மனநிலை பாதிக்கப்படும். தலையில் உபத்திரவம் ஏற்படும். சிலர் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடும். பெண்களுக்குக் குழந்தை உண்டாவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியே உண்டானலும் பிரசவம் சிக்கலாக இருக்கும்

6ல் ஜாதகனின் பெயர் ரிப்பேராகி இருக்கும். அல்லது தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளும் விதமாக ஜாதகன் நடந்து கொள்வான். எதிர்ப்புக்களை ஜாதகன் எதிர் கொள்ள நேரிடும். வம்பு வழக்கு, மற்ரும் கட்டைப் பஞ்சாயத்துக்களில் ஜாதகன் வெற்றி பெறுவான். செவ்வாயும் ஆறாம் இடமும் சேர்ந்திருப்பதால் ஜாதகன் இரத்த சம்பந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்

7ல் இந்த அமைப்பு ஏழில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்து கொள்வான். சிலர் வேற்று மதப் பெண்ணை மணந்து கொள்வார்கள். சம்பிரதாயங்களைக் கிலோ என்ன விலை என்று ஜாதகன் கேட்பான். இந்த அமைப்பு இருக்கும் பெரும்பான்மையினருக்குக் காதல் திருமணம் தான் நடைபெறும்!

8ல் இந்த அமைப்பு எட்டாம் இடத்திற்கு நல்லதல்ல. பல பிரச்சினைகள் துன்பங்கள் ஏற்படும். ஜாதகன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவான். சிலர் அதற்கு முயற்சியும் செய்வர்கள். வாழ்க்கை சர்ச்சைக்கு உரியதாக இருக்கும் சுபக்கிரகங்களின் பார்வை இந்த இடத்தில் இருந்தால் இந்த பாதிப்புக்கள் எதுவும் இருக்காது!

9ல் ஜாதகனுக்குக் கெட்டிக்காரத்தனம் இருக்கும். சிலர் மத போதகராக அல்லது மதப் பேச்சாளராகச் சிறப்படைவார்கள். மேலும் ஒரு கிரகத்தின் தீய பார்வை விழுந்தால் ஜாதகன் தீவிரவாதியாகி விடுவான்.

10ல் ஜாதகன் சிறந்த நிர்வாகத் திறமைகள் உடையவனாக இருப்பான். அதிகாரத்துடன் கூடிய பெரிய பதவிகள் கிடைக்கும்.

11ல் பொதுவாக ஜாதகன் அரசியலில் அல்லது அரசில் பணிபுரிந்து புகழ் பெறுவான். வளமையோடும், செல்வாக்கோடும் இருப்பான்

12ல் ஜாதகன் குணமில்லாதவனாக இருப்பான். எப்போது என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தெரியாது.

சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம

கோச்சாரப்படி சந்திரன், உங்கள் ராசிக்கு 3, 6, 8, 12ஆம் போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் தினங்களில் (சுமார் 9 நாட்கள்) உங்களுக்கு மன மகிழ்ச்சி இருக்காது அது பொது விதி. சந்திரன் ஜாதகத்தில், உச்சம் பெற்றோ அல்லது கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருந்தாலோ உங்களுக்கு பெரிதாக மனப் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. எதையும் தாங்கும் மனது இருக்கும். பெரிய அளவில் மன பாதிப்புக்களும் ஏற்படாது. அனால் அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் தொல்லைதான். எப்போதும் மனக்கவலை, மன உளைச்சல் இருக்கும்.

கேது ஞானத்தைத் தருவான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் பல பிரச்சினைகள் துன்பங்களைச் சந்தித்தாக வேண்டும். அந்த ஞானம் ஜஸ்ட் லைக் தட் என்று ஈசியாகக் கிடைக்காது. Ketu is natural enemy for moon The Ketu / Moon association shows a native who experiences deep levels of doubt and criticism of their own mind and mental outlook. This is one of the most difficult placements as it can make for a deeply discontented mind and extreme moodiness. Typical worldly experiences and pleasurable emotions can lead to painful events. Many of the moods are from past life events that overtake the native, and then pass. Smaller disturbances trigger mental worries that neither the native, nor anyone else can control. Yet generally the native is good at controlling the emotions. Yet control is not the same as having the detachment to enjoy without longing or regret. Ketu with the Moon on the positive note gives intuition, introspection, and interest in meditation and silence சந்திரனுடன் கேது சேர்ந்தால், நீங்கள் பாதி ஞானி. முழு ஞானியாவது என்பது ஜாதகத்தில் உள்ள பிற அம்சங்களைப் பொறுத்தது!

கேதுவும் +சந்திரனும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து ஜாதகத்தில் இருப்பதற்கு உகந்த இடங்கள் ஆறாம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு மற்றும் பதினொன்றாம் வீடு ஆகிய இடங்களே. மற்ற இடங்கள் உகந்ததல்ல! Ketu is a killer, and strips the house where it tenets of life in a way, but can promote it in another way. The way it does both is through it's strong empty feeling. By promoting an emptiness in that house, the person often struggles to refill it. This can result in accumulation and abundance (overflowing fullness: abundance of the heart) for that house, Ketu in the 7th causes a feeling of loss of connections with others, a natural result of Rahu in the first, which makes one often rejected and abandoned for being out caste. This happens subtly through out life for those bearing the mark of Rahu in the first.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 1ல் இருந்தால்: "உடலும் உள்ளமும் நலந்தானா? என்று அடிக்கடி கேட்க வேண்டிய நிலையில் ஜாதகன் இருப்பான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 2ல் இருந்தால்: குடும்ப அமைப்பிற்கு இது உகந்ததல்ல. ஜாதகனின் துணைவிக்கு அல்லது ஜாதகியாக இருந்தால் துணைவனுக்கு நல்லதல்ல!

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 3ல் இருந்தால்: சகோதர, சகோதரிகள் மூலம் ஜாதகனுக்கு அடிக்கடி மன உளைச்சல்கள் ஏற்படும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 4ல் இருந்தால்: சூழ்நிலையால் ஏமாற்று வேலைகளில் ஜாதகன் ஈடுபட நேரிடும். அதை வைத்துப் பல பிரச்சினைகளைச் சந்திக்கவும் நேரிடும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 5ல் இருந்தால்: சிகரெட், பான் பராக், மது, போதை வஸ்துக்கள் என்று எல்லா தீய பழக்கங் களுக்கும் ஜாதகன் அடிமைப்பட நேரிடும்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 6ல் இருந்தால்: இது இருவருக்கும் உகந்த இடம், ஜாதகன் மருத்துவம் அல்லது உடல் சார்ந்த துறைகளில் பணியாற்றி மேன்மை அடைவான்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 7ல் இருந்தால்: ஜாதகன் தகுதி இல்லாத பெண்களின் சகவாசத்தால் கெட்டு அலைய நேரிடும் இந்த அமைப்பு உள்ளவர்கள் பெண்கள் விஷ்யத்தில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். பெண்களாக இருந்தால், ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 8ல் இருந்தால்: இது உகந்ததல்ல. ஜாதகனின் துணைவிக்கு அல்லது ஜாதகியாக இருந்தால் துணைவனுக்குக் கண்டம் ஏற்படும்!

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 9ல் இருந்தால்: ஜாதகன் ஆன்மிகம், இறைவழிபாடு என்று சமர்த்தாக இருப்பான். பின்னாட்களில் அவற்றில் பிரபலம் அடையவும் செய்வான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 10ல் இருந்தால்: ஜாதகன் பெரும்பாலும் மருத்துவத்துறையில் பணிபுரிய நேரிடும். அதில் மேன்மையும் அடைவான்.

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 11ல் இருந்தால்: ஜாதகன் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், அத்துறையில் முழுத் திறமை யுடையவனாக, அறிவுஜீவியாக இருப்பான். அதில் தொடர்ந்து பணிபுரிந்து மேன்மையடைவான்

கேதுவும் சந்திரனும் சேர்ந்து 12ல் இருந்தால்: ஜாதகன் பற்று அற்றவனாக இருப்பான். எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். முழு ஞானியாக இருப்பான் பற்று இல்லாவிட்டாலே ஞானிதானே சாமிகளா?

சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

8. கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 
------------------------
கேது.
சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.
உரிய பால் : அலிக் கிரகம்.
உரிய நிறம் : சிவப்பு.
உரிய இனம் : சங்கிரம இனம்.
உரிய வடிவம் : உயரம்.
உரிய அவயம் : கை, தோள்.
உரிய உலோகம் : துருக்கல்.
உரிய மொழி : அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் : வைடூரியம்.
உரிய ஆடை : புள்ளிகளுடன் சிவப்பு (பல நிறங்கள்).
உரிய மலர் : செவ்வல்லி.
உரிய தூபம் : செம்மரம்.
உரிய வாகனம் : சிம்மம்.
உரிய சமித்து : தர்ப்பை.
உரிய சுவை : உறைப்பு.
உரிய தான்யம் : கோதுமை.
உரிய பஞ்ச பூதம் : ஆகாயம்.
உரிய நாடி : பித்த நாடி.
உரிய திக்கு : வட மேற்கு.
உரிய அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
உரிய குணம் : தாமசம்.
உரிய ஆசன வடிவம் : மூச்சில்.
உரிய தேசம் : அந்தர்வேதி.
நட்புப் பெற்ற கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.
கேதுவின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீனம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உரிய உப கிரகம் : தூமகேது.
உரிய காரகத்துவம் : மதாமஹன்.
மதாமஹன் அதாவது மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், விபச்சாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||"
கேது காயத்ரி..
"அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்||"

1 comment :

  1. தினசரி ராசிபலன்கள் பார்க்க சிறந்த இணையதளம் - http://www.valaitamil.com/astrology_aries-1-2-3-astro1.html, பாருங்கள் ! எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

    ReplyDelete