01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

குழந்தை பாக்கியம்


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.
“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான். 
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன்.


புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்? 

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், இதுவரை தனது மனைவி 4 முறை கர்ப்பம் தரித்தாலும், சிறிது நாட்களிலேயே கரு கலைந்து விடுவதாக வருத்தத்துடன் கூறினார். கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும். 
அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். 
இதேபோல் “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம்” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம். 
ஆனால், குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விடயங்களை கணக்கிட வேண்டும்.
--------------------------------------------------------------------
மலடு யார் ?

ஆண் ஒருவரின் விந்தணுக்களின் பலத்தை கேது, செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களையும் கொண்டு நிர்ணயிக்கின்றனர்.  பெண்ணின் அண்டத்தில் உள்ள சுரோணிதத்தின் வல்லமையை புதனும் ராகுவும் வெளிப்படுத்தும்.  பூர்வ புண்ய தனாதிபதியான ஐந்துக்கு உரியோன் பாவியுடன் கூடி பலவீனனாய் ஏழில் இருந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார்.


ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் ஆறில் நீச்சம் அடைந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார். ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீச்சனாய் 6, 8, 12 வீடுகளில் மறைந்தால் அவர் மனைவி மலட்டுத் தன்மையைப் பெறுவார்.

 அதேபோல், ஐந்தாம் வீட்டில் புதனும் கேதுவும் இருந்தால் அவர் மனைவி மலடி ஆவார். இது எந்த லக்னத்திற்கும் பொருந்தும். ஆனால் இவர்களை குருவோ சுக்கிர பகவானோ பார்த்தாலோ, புதன், கேது நின்ற வீட்டுக்குரியவர் பலம் அடைந்து காணப்பட்டாலோ அவர் மனைவியின் மலட்டுத்தன்மை விலகும். மேலும், ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசமாகி ஐந்தாம் வீட்டில் புதனும் சனியும் இருந்தால் அந்த ஜாதகரின் மனைவி மலடி ஆவார். மற்றும், ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் அல்லது 7ஆம் வீட்டில் சுக்கிரனும் சூரியனும் கூடியிருந்தால் அந்த ஜாதகரின் மனைவி மலடி ஆவார் என்பதை அறிந்து கொள்க.


ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சுக்ரன் காணப்பட்டாலோ, சுக்கிரனை செவ்வாய் பார்த்தாலோ விந்தானது விரைவாய் வெளிப்பட்டுவிடும். சுக்கிரன் மீது, சனி, சந்திரன் பார்வை இருந்தால் சற்றே தாமதத்துடன் விந்தணுக்கள் வெளிப்படும்.  சுக்கிரன் தன் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலோ, செவ்வாயின் நட்சத்திரத்தில் இருந்தாலோஈ, வெளிப்படும் வீரியத்தின் அளவு மிகவும் அதிகமாய் இருக்கும்.

  மேலும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம், துலாம், மீனம் ஆகியவற்றில் இடம் பெற்றிருந்தால் அவரின் விந்து வெண்மையானதாயும், தூய்மையானதாயும் இருக்கும். அதே சுக்கிர பகவான் மிதுனம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் காணப்பட்டால் விந்து சற்றே நிறம் மங்கிக் காணப்படும். அதே சுக்கிர பகவான் கடகம், சிம்மம், கன்னி, மேஷம், தனுசு ஆகியவற்றில் இருந்தால் வெளிப்படும் வீரியம் துர்நாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாயும் இருண்ட நிறம் உடையதாயும் காணப்படும்அலியாக மாறும் ஜாதகர் யார்?
உலகத்தில் அலி என்று யாரும் கடவுளின் படைப்பில் கிடையாது. ஆனால், நவக்கிரகங்களுள் புதன் பகவானும், சனி பகவானும் அலிக் கிரகங்களாய் விளங்குகின்றனர். அவற்றுள் புத பகவான் பெண் தன்மை அதிகம் கொண்ட பெண் அலியாகவும், சனி பகவான் ஆண் தன்மை அதிகம் கொண்ட ஆண் அலியாகவும் விளங்குகின்றனர்.


இவ்விரு கிரகங்களுடன் பிற கிரகங்கள் சம்பந்தப்படும்போது, அந்த ஜாதகருக்கு அலித்தன்மை ஏற்படுகிறது. சுக்கிரன் ஆறிலும், எட்டில் சனியும் நின்றால் அந்த ஜாதகர் அலித்தன்மை உள்ளவர் ஆவார். அதேபோல், சனியும் சுக்கிரனும் ஜென்ம லக்னத்திற்கு எட்டு அல்லது பத்தாம் வீட்டில் அமர்ந்து சுபக்கோள்களின் பார்வை பெறாவிடில், அந்த ஜாதகர் அலியாவார். மேலும், லக்னத்திற்குஆறு, பன்னிரெண்டாம் வீடுகள் ஜல ராசியாகிய கடகம், மகரம், மீனமாய் இருந்து, அதில் சனியும் இருந்து, சுபக் கோள்களின் பார்வை இல்லாவிடில் அவர் அலியாவார்.

 இத்தகைய அமைப்பு சிம்மம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கே அதிகம் ஏற்படும். மேலும், சனி பகவான் நீசனாய் ஜென்ம லக்னத்திற்கு ஆறு அல்லது எட்டில் அமர்ந்தாலும் அந்த ஜாதகர் அலியாவார். இந்த அமைப்பு கன்னி, விருச்சிகம் ஆகிய இரு லக்னக்காரர்களுக்கு ஏற்படுகிறது. சுனி பகவான் நீசம் அடைவது மேஷத்தில் தான். இதில் செவ்வாய் ஆட்சி பெறாமல் இருந்தாலும் அந்த ஜாதகர் மேற்சொன்னபடி அலியாய் இருப்பார். அதேபோல், சந்திரனும் சூரியனும் ஒருவருக்கொருவர் பார்த்தாலும் அலியாவார்.

மேற்கொண்ட நிலை பௌர்ணமியன்றுதான் ஏற்படும். அப்படியென்றால், பௌர்ணமியன்று பிறந்தவர்கள் எல்லாம் அலியாய் இருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். சந்திரனும் சூரியனும் ஆண் ராசிகள் ஆகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவற்றிலோ, பெண் ராசிகள் ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றிலோ இருந்து, சமமான பாதையில் இருவரின் கதிர்களும் சந்திரனும் ஆண்-பெண் ராசிகளென்று கலந்து, மாறி மாறிக் காணப்பட்டால் அலித்தன்மை ஏற்படாது!

அதேபோல், ஒருவரின் லக்னம் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாய் இருந்து, செவ்வாய் பகவான் இரட்டை ராசியாகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இருந்து லக்னத்தைப் பார்த்தால் அந்த ஜாதகர் அலியாவார் மேலும், சந்திரன் இரட்டை ராசிகள் ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இடம்பெற்று, புதன் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் இருக்க, அவர்களை செவ்வாய் பார்த்தால் அலித்தன்மை ஏற்படும்.
-------------------------------------------------------------------


   ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      ஆனால் பெண்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தை பார்ப்பதோடு, 5க்கு 5ம் இடமான 9ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் கானலாம்.
      ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை.
      புத்திர ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை அல்லது புத்திர இழப்பு ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை. அது குருவினுடைய ஆட்சி உச்ச வீடாக இருந்தால் மாறாக‌ நற்பலன்கள் ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்ததிபதி ஆகியோருடைய திசை புத்தி காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது.
      கோசார ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன் உண்டாகிறது.
      ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில் நற்பலன்கள் அமைவதில்லை.
      புத்திர ஸ்தானம் கடகமாக இருந்து அதில் சனி தனது நட்சத்திர காலில் வீற்றிருந்தால் நிறைய புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.
      புதன் 5ம் இடத்தில் இருந்தால் பெண் புத்திர பாக்கியம் ஏற்படும், அல்லது புத்திர பக்கியம் குறைவாக இருக்கும்.
      5க்குடையவர் எத்தனை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றுள்ளாரோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      அதே போல் 5ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது வீற்றிருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11ம் இடத்தில் வீற்றிருந்தால் பல பிள்ளைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.
      இதில் எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும்
கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

No comments :

Post a Comment