01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

சந்திரன்


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 


1. சுகங்கள், துக்கங்கள் 2. கோபங்கள், தாபங்கள் 3. உடன்பாடுகள் 4. முரண்பாடுகள் 5. ஒட்டுதல்கள் 6. விரிசல்கள் 7. பிடிவாதங்கள் 8. விட்டுக்கொடுத்தல்கள் 9. சுயநலங்கள் 10. தியாகங்கள் 11. எதிர்பார்ப்புக்கள் 12. ஏமாற்றங்கள் 13. நம்பிக்கைகள் 14. துரோகங்கள் 15. காதல் 16. காமம் 17. மன நெகிழ்ச்சிகள் 18. மன எரிச்சல்கள் 19. புளங்காகிதங்கள் 20. பூசல்கள் சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால் மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச் சந்திப்பான். இல்லையென்றால் இல்லை! மனப் போராட்டம்தான்!

சந்திரனின் ஆதிபத்யங்கள் சொந்த வீடு: கடகம் (1) நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3) சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6) உச்சவீடு: ரிஷபம் (1) நீசவீடு: விருச்சிகம் (1) பகைவீடு: எதுவுமில்லை! (அப்பாடா பிழைத்தோம்) அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும்? ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும் அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான். அனுசரித்துப் போனால் பகை ஏது? சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை இருக்கும். சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம் அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது அலசுவோம் சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு. சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது. நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான். இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க!


நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து. தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்) எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும்! சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்! அதிதேவதை: பார்வதி (பராசக்தி)

Moon is the presiding deity of the element water, and rules over the tides of the sea. The sphere of the Moon is the reservoir of rainwater and thus Moon is the ruler of plants and the vegetable kingdom. Moon represents the mother or female principle, the energy that creates and preserves. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person. Some will be tender-hearted, wise, and learned.

Water Content of the Human Body: The average person is about 70% water by weight! சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி. பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின் (Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண மனிதர்கள் அதை உணர்வதில்லை. பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். The Moon gives illumination, sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune. It makes us moody, emotional, and sensitive. வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன் நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள் கிடைக்காது. இது பொது விதி அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்? ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள் இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து 181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும் சந்திரன் தேய்பிறைச் சந்திரன் அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை) நாட்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்

சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:

1. மேஷத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். இந்த இடத்தில் சந்திரன் அமைந்த ஜாதகன் செயல் வீரனாக இருப்பான். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டான். உடல், மனம் இரண்டிலும் பலம் பொருந்திய வனாக இருப்பான். உணர்ச்சி வயப்பட்டவனாக இருப்பான். எளிதில் தூண்டுதலுக்கு இறையாகிவிடுபவனாக இருப்பான். (Easily ignited; flammable.). சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொடுப்பவனாக இருப்பான்.

2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் சுக்கிரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் அமர்வதற்கு உகந்த இடம் இதுதான். This is the most favoured position in the chart for the moon). எல்லா உணர்வுகளையும் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் திறமையும் ஜாதகனிடம் இருக்கும். ரசனை உணர்வு மிக்கவனாக ஜாதகன் இருப்பான். அழகு, இயற்கை, கலைகள் என்று எல்லாவற்றையும் ரசித்துப் போற்றுபவனாக இருப்பான். பிடிப்பான கொள்கை, கண்ணோட்டம் உடையவனாக ஜாதகன் இருப்பான். நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருப்பான். சில சமயங்களில் இந்த அதீதப் பிடிப்பினால் கோபமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் ஆளாகவும் இருப்பான்.

3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல் ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன். எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன். தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்

4. கடகத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் சந்திரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். அதாவது சந்திரனின் சொந்த வீடு. இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு, நல்ல, வலுவான, சக்தியுள்ள மனதைக் கொடுக்கும். A moon sitting in its own sign is good and strong and shows a powerful mind. சிலர் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரஃப் & ட்ஃப்பாக நடந்து கொள்ளவும் செய்வார்கள்.சிலர் மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களைப் போற்றி வளர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்த அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.

5. சிம்மராசியில் சந்திரன் இருந்தால்: இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத் தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக் கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும் அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால் கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும் விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.

6. கன்னிராசியில் சந்திரன் இருந்தால்: இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில் நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால் சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும் மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும் உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான். புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான் வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான். அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

7. துலா ராசியில் சந்திரன் இருந்தால்: இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன் அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன் காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான். சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்

8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு. இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான் சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம். இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும் அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடுவார்கள். காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த அமைப்பின் துயரம். மற்றவர்கள் உங்கள் உனர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இறை வழிபாடு ஒன்றுதான் இந்த அமைப்புள்ளவர்களுக்குத் துணை!

9 தனுசு ராசியில் சந்திரன் இருந்தால்: இது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல குணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும் ஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல் ஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே அடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய லட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான். தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான

10 மகரத்தில் சந்திரன் இருந்தால்: இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், செய்யும் தொழிலை அல்லது வேலையை ஆர்வமுடன் செய்வான். அதுவே அவனை வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லும். நல்ல குணவான். அதே நேரத்தில் சில விஷயங்களில் அடிக்கடி மனமாற்றம் உடையவனாக இருப்பான். நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான். இந்த அமைப்புள்ளவர்கள் அன்பிற்கு இலக்கணமாக இருப்பார்கள். பிரச்சினைகளை பொறுமையுடன் எதிகொள்பவனாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். நுண்கலைத் திறமைகள் கொண்டவனாக இருப்பான். பலராலும் பாராட்டப் படுபவனாக இருப்பான்

11 கும்பத்தில் சந்திரன் இருந்தால்: இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதி புத்தி சாலியாக இருப்பான். வாழ்க்கைத்ததுவம், இறைவழிபாடு ஆகியவற்றில் நாட்டம் உடையவனாக இருப்பான். தியானம், மற்றும் யோகா போன்ற கலைகளில் நாட்டம் இருக்கும். எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் தன்மை இருக்கும். சிலர் கலைஞர்களாக பரிணமளிப்பார்கள். நன்றாக வேலைகளைச் செய்யக்கூடியவனாக இருப்பான். சிலரை வாழ்க்கையிம் ஏற்ற, இறக்கங்கள் அவ்வப்போது புரட்டிப் போடும். அதைத் தாங்கி மீண்டும் மேலுக்கு வரும் மனநிலை கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

12. மீனத்தில் சந்திரன் இருந்தால்: இது குரு பகவானுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் பல லட்சியங்களையும், கொள்கைகளையும் உடையவனாக இருப்பான். நடத்தை தவறாதவனாக இருப்பான். உணர்ச்சிவயப்படுபவனாக இருப்பான். அல்லது உணர்ச்சி வசப்படுவர்களிக் கண்டு பாதிப்பிற்கு உள்ளாகிறவனாக இருப்பான். பெருந்தன்மையானவன். ஜெண்டில்மேன் என்று மற்றவர்களால் மதிக்கப்படுபவானாக இருப்பான். புத்திசாலியாக இருப்பான். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். உலக வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியசாலியாக இருப்பான். நம்பிக்கைக்கு உரிய நட்புக்கள் அவனைத் தேடிவந்து சேரும்

Mathematics gave birth to the Law of Probability. When this Law based on astronomical facts & figures is applied, it becomes the Wisdom of the Heavens, Astrology. Rightly it has been defined as a Lamp in darkness. Despite the allegations leveled against it, Astrology continues its role as one of the noblest professions & one of the greatest sciences which human intellect has built up. The role of Moon in Horoscope As the Queen of the Solar Logos, Moon is an important luminary capable of conferring great mental power. The position of Moon is very important from the perspective of prosperity. A strong Moon, powerful in digit strength,can give immense courage to the native and courage is essential for prosperity. Prosperity depends on the position of Moon & Jupiter, the indicator of wealth. The Moon is considered as a natural benefic in Vedic Astrology.

Effects of Moon in the 12 Houses 1 Moon in the Ascendant If weak Moon ( weak in digit strength ) tenants the First House, the native will be devoid of mental strength and longevity. If Full Moon is posited in the Ascendant, the native will have good longevity and will be a scholar. If the Ascendant is Taurus or Cancer,the native will be wealthy & famous.

2 Moon in the Second House Will have wealth & all sorts of enjoyments.Will have the gift of the gab or the divine gift of articulate speech. Will be handsome and will have the ability to understand others perspectives. Will be educated with scientfic knowledge.

3 Moon in the Third House Will have wealth, education, virility & pride. Will have good strength. Will have gains via brothers. Will be miserly.

4 Moon in the Fourth House Will have wealth and conveyances. Will be liberal and altruistic. Will be fond of the other sex. Will not be too attached to anything. Will be a donator.

5 Moon in the Fifth House Will be highly intelligent and kind. Will be interested in politics. Will be affable and diplomatic.

6 Moon in the Sixth House Will be cruel and intelligent. Will have disorders of the digestive tract. Will face many a defeat. Will be intelligent and clever. Will be slightly lazy. This position is slightly detrimental to prosperity.

7 Moon in the Seventh House Will posses wealth & fortune. Will have a high standard of comeliness. Will have accumulated property. Will be kind. Will enjoy the pleasures of the mundane.

8 Moon in the Eighth House Will be quarrelsome and devoid of benevolent attitude. Will be afflicted by many a disease. Will be handsome. Will have less longevity. Will have marks caused by wounds on his/ her body.

9 Moon in the Ninth House Will be highly religious,liberal & will have devotion to elders and preceptors. Will possess devotion of a high order.

10 Moon in the Tenth House Will be well off. Will have gains from education.Will be liberal and altruistic. Will be famous and will get fame from many altruistic deeds.

11 Moon in the Eleventh House Will have wealth and a lot of subordinates. Will have education of a high order. Will be versatile. Intelligence of a high degree will grace the native. Will be altruistic and liberal

12 Moon in the Twelfth House Will be lazy and devoid of wealth. Will be an outcast. Will have to face a lot of defeats. Will live in foreign lands. Mothers health may be affected.

சந்திரனின் சுய அஷ்டகவர்க்கப் பலன்கள்! சுயவர்க்கத்தில் சந்திரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்: எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில் கொள்க! 1.பரல்: விஷ ஜந்துக்களிடமிருந்தும், ஆயுதங்களில் இருந்தும் பாதகங்கள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 2.பரல்கள்: ஜாதகனின் தாய்க்குப் பாதகங்கள் ஏற்படும்! ஜாதகனுக்கு நோய்களால் அவதிப்படுவான் 3.பரல்கள்: மேற்கூறிய பலன்கள் குறைந்த அளவில் இந்த அமைப்பிற்கு இருக்கும் . 4.பரல்கள்: ஜாதகனின் குடும்பம் மேன்மையுறும். 5.பரல்கள்: மன அமைதியும், நல்ல நடத்தையும் ஜாதகனிடம் குடி கொள்ளும். 6.பரல்கள்: நல்ல மன திடமும், உயர்ந்தகோட்பாடுகளும் உடையவனாக ஜாதகன் இருப்பான். 7.பரல்கள்: ஜாதகன் எல்லாக் கலைகளிலும் ஆர்வமுடையவனாகவும், விற்பன்னனாகவும் இருப்பான் 8.பரல்கள்: மகிழ்ச்சியான அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும்

சந்திரனின் கோச்சாரப் பலன்கள்: குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன், ஜாதகனின், ராசியில் தான் இருக்கும் ராசியை வைத்து கோச்சாரத்தில் இருக்கும் இடங்களுக்கான பலன்கள்: சந்திரன் ஒரு ரவுண்டு அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 27 (இது இளைஞர்கள் அடிக்கும் ரவுண்டு அல்ல!) அதனால் ஒரு ராசியில் இருப்பது 2.25 நாட்கள் மட்டுமே 1ல், 3ல், 6ல், 7ல், 10ல், 11ல் இருக்கும்போது மட்டுமே நன்மை அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் மட்டுமே நன்மை. 2ல், 4ல் 5ல், 8ல், 9ல், 12ல் இருக்கும்போது நன்மைகள் இருக்காது. சந்திரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிக, மிகக் குறைவானது! அவர் ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த காரியங்கள் முடியாது. ஆகவே அன்றைய தினங்களில் Routine work களை செய்தால் போதும் சந்திரனின் கோச்சாரத்தை வைத்துத்தான், நாளிதழ்களில் தினப்பலன் களை எழுதுவார்கள்.சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும். அந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக் காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின் காலத்தில் நன்மைகள் இருக்காது.

CHANDRA: Milkman, Milkmaid, Farmer, Grass vendor, Midwife, Nurse, Washer man, Baker, Hawker,, Boatman, cook, dry cleaner, waiter, compounder, sailor, messenger, travel agent, navigator, pearl maker.

கோச்சாரப்படி சந்திரன், உங்கள் ராசிக்கு 3, 6, 8, 12ஆம் போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் தினங்களில் (சுமார் 9 நாட்கள்) உங்களுக்கு மன மகிழ்ச்சி இருக்காது அது பொது விதி. சந்திரன் ஜாதகத்தில், உச்சம் பெற்றோ அல்லது கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருந்தாலோ உங்களுக்கு பெரிதாக மனப் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. எதையும் தாங்கும் மனது இருக்கும். பெரிய அளவில் மன பாதிப்புக்களும் ஏற்படாது. அனால் அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், ஜாதகத்தில் தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் தொல்லைதான். எப்போதும் மனக்கவலை, மன உளைச்சல் இருக்கும்.
Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.

தனிப் பலன்கள்

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன்.

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான்.

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான்.

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான்

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்)

சந்திரனும், செவ்வாயும் கூட்டணி1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!

2. சந்திரன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே அதிபதி.நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 
------------------------------------------------

சந்திரன்.
சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அமுக்கதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து, வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.
உரிய பால் : பெண் கிரகம்.
உரிய நிறம் : வெண்மை நிறம்.
உரிய இனம் : வைசிய இனம்.
உரிய வடிவம் : குள்ள மான உயரம்.
உரிய அவயம் : முகம், வயிறு.
உரிய உலோகம் : ஈயம்.
உரிய மொழி : இல்லை.
உரிய ரத்தினம் : முத்து.
உரிய ஆடை : வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை.
உரிய மலர் : வெள்ளை அலரி.
உரிய தூபம் : சாம்பிராணி.
உரிய வாகனம் : முத்து விமானம்.
உரிய சமித்து : முருக்கு.
உரிய சுவை : உப்பு.
உரிய பஞ்ச பூதம் : அப்பு.
உரிய நாடி : சிலேத்தும நாடி.
உரிய திக்கு : வடமேற்கு.
உரிய அதி தேவதை : பார்வதி.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
உரிய குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம்.
உரிய ஆசன வடிவம் : சதுரம்.
உரிய தேசம் : யமுனா.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன்.
பகைப் பெற்ற கோள்கள் : இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு.
உரிய தெசா புத்திக் காலம் : பத்து ஆண்டுகள்.
சந்திரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன்.
மேலும் பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"ததிஸங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|
நமாமி ஸஸிநம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்||"
சந்திர காயத்ரி..
"ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||"

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 


1 comment :