01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

கிரஹங்களின் வரலாறு


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

கேது பாட்டியாருக்க காரகமாக சோதிடத்தில் வகிக்கிறார். கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

இரத்தினம் - வைடுரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குருரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - மீனம்

உறுப்பு - உள்ளங்கால்

நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்

பால் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 1 1/2 வருடம்

நட்பு - சனி , சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

ஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம்.

*************************************


ராகு பாட்டனாருக்கு காரகத்துவம் என் சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். விஷம், மரணம்,பித்தம், பேய் பிசாசு , மது குடித்தல், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, சிறைப்படல், விதவையுடன் தொடர்பு ,மாந்திரீகம், பிறறை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள்,புத்திர தோஷம், பித்ரு தோஷம் , விஷ பூச்சிகள். போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.

ராகுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். சேரும் கிரகத்திற்க்கு தக்கவாறும் செயல்படும்.

நிறம் - கருப்பு

தேவதை - பத்திரகாளி

பிரத்யதி தேவதை - சர்ப்பம்

இரத்தினம் - கோமேதம்

மலர் - மந்தாரை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - கொடி

தேசம் - பாபர

சமித்து - அறுகு

திசை - தென்மேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - கருங்கல்

வாகனம் - ஆடு

பிணி - பித்தம்

தானியம் - உளுந்து

காரகன் - பாட்டன்

ஆட்சி - சொந்த வீடு கிடையாது

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - முழங்கால்

நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்

பால் - பெண்

திசைகாலம் - 18 வருடங்கள்

கோசார காலம் - 1 1/2 வருடம்

நட்பு - சனி, சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன் , செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - வியதீபாதன்

ஸ்தலம் - திருநாகேஸ்வரம்.

*************************************

சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.

இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை , இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.

நிறம் - கறுப்பு

தேவதை - யமன்

பிரத்தியதி தேவதை -பிரஜாபதி

இரத்தினம் - நீலக்கல்

மலர் - கருங்குவளை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - வில்

தேசம் - சௌராஷ்டிரம்

சமித்து - வன்னி

திக்கு - மேற்கு

சுவை - கசப்பு

உலோகம் - இரும்பு

வாகனம் - காகம்

பிணி - வாதம் ,வாய்வு

தானியம் - எள்

காரகன் - ஆயுள்

ஆட்சி - மகரம், கும்பம்

உச்சம் - துலாம்

நீசம் - மேஷம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - தொடை

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பால் - அலி

திசை காலம் - 19 வருடங்கள்

கோசார காலம் - 2 1/2 வருடம்

நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - வியாழன்

உபகிரகம் - குளிகன்

ஸ்தலம் - திருநள்ளாறு .

*************************************

சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.

இவர் அசுர குரு. காமத்திற்க்கு, வாகனம், ஆடை ஆபரணம், வாசனை திரவியங்கள், அலங்காரம், படுக்கைசுகம், துள்ளும் இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி கொண்டு வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. ஒரு ராசியில் 1 மாதம் சஞ்சாரம் செய்வார்.

நிறம் - வெண்மை

தேவதை - இலட்சுமி, இந்திராணி

பிரத்யதி தேவதை - இந்திரன்

இரத்தினம் - வைரம்

மலர் - வெண்தாமரை

குணம் - சௌம்யன்

ஆசன வடிவம் -ஐங்கோணம்

தேசம் - காம்போஜம்

சமித்து - அத்தி

திக்கு - கிழக்கு

சுவை - இனிப்பு

உலோகம் - வெள்ளி

வாகனம் - கருடன்

பிணி - சீதளம்

தானியம் - மொச்சை

காரகன் - களத்திரம்

ஆட்சி - ரிஷபம், துலாம்

உச்சம் - மீனம்

நீசம் - கன்னி

மூலத்திரிகோணம் - துலாம்

உறுப்பு - முகம்

நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்

பால் - பெண்

திசை காலம் - 20 வருடங்கள்

கோசார காலம் -1 மாதம்

நட்பு - புதன், சனி, இராகு, கேது

பகை - சூரியன், சந்திரன்

சமம் - செவ்வாய், குரு

உபகிரகம் - இந்திர தனுசு

ஸ்தலம் - கஞ்சனூர்

**************************************

குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்று அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர். சும்மாவாக சொன்னார்கள் குரு பார்க்க கோடி நன்மை என்று. அனைத்து பிரச்சினையும் குருவை கொண்டு போக்கிவிடலாம்.

புத்திரர், நல்ல அறிவு, மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர், சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.

குரு அமர்ந்த இடம் பாழாகிவிடும். 5,7,9 பார்வை உண்டு.

நிறம் - மஞ்சள்

இரத்தினம் - புஷ்பராகம்

மலர் - முல்லை

குணம் - சத்துவ

தேவதை - தெஷ்ணாமூர்த்தி, நான்முகன், இந்திரன்.

பிரத்யதி தேவதை - நான்முகன்

ஆசன வடிவம் - செவ்வகம்

தேசம் - சிந்து

சமித்து - அரசு

திக்கு - வடக்கு

சுவை - இனிப்பு

உலோகம் - பொன்

வாகனம் - யானை

பிணி - வாதம்

தானியம் - கொண்டைகடலை

காரகன் - புத்திரம், தனம்

ஆட்சி - தனுசு, மீனம்

உச்சம் - கடகம்

நீசம் - மகரம்

மூலத்திரிகோணம் - தனுசு

உறுப்பு - வயிறு

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

பால் - ஆண்

திசை காலம் - 16 வருடங்கள்

கோசார காலம் - 1 வருடம்

நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகை - புதன், சுக்கிரன்

சமம் - சனி, இராகு, கேது

உபகிரகம் - எமகண்டன்

ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர்.

***************************************

புதன் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்களைப் பற்றி சோதிடத்தில் புதனை வைத்துதான் கணிக்கப்படுகிறது. புதன் ஒரு அலிக்கிரகம் ஆகும். புதன் ஆண் கிரகங்களோடு சேரும் போது ஆண் தன்மையும் பெண் கிரகங்களோடு சேரும் போது பெண் தன்மையும் அடைகிறது.

சேரும் இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். சோதிடம், பச்சை நிறம்,எல்லா நேரத்திலும் வலிமையுடைவர், பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கபடம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.

புதனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. 1,4,7,10 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் வலிமையுடன் இருப்பார்.

நிறம் - பச்சை

தேவதை - விஷ்ணு

பிரத்யதி தேவதை - நாராயணன்

இரத்தினம் - மரகதம்

மலர் - வெண்காந்தாள்

குணம் - சௌம்யன்

ஆசனவடிவம் - அம்பு

தேசம் - மகதம்

சமித்து - நாயுருவி

திக்கு - வடகிழக்கு

சுவை - உவர்ப்பு

உலோகம் - பித்தளை

வாகனம் - குதிரை

பிணி - வாதம்

தானியம் - பச்சைப் பயறு

காரகன் - தாய்மாமன், கல்வி

ஆட்சி - மிதுனம், கன்னி

உச்சம் - கன்னி

நீசம் - மீனம்

மூலத்திரிகோணம் - கன்னி

உறுப்பு - கழுத்து

நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி

பால் - அலி

திசைகாலம் - 17 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்

நட்பு - சூரியன்

பகை - சந்திரன்

சமம் - செவ்வாய், வியாழன், சனி, இராகு, கேது

உபகிரகம் - அர்த்தப்பிரகரணன்

ஸ்தலம் - திருவெண்காடு.

****************************************

செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாய்யின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரணகர்த்தாவக இருக்கிறார்.

சகோதரம் வீரம், வெட்டுக்காயம், தீ காயம் , விபத்தில் இரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளி ஏறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம்.

செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2,4,7,8,12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். 3,6,11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.

நிறம் - சிவப்பு

தேவதை - முருகன்

பிரத்யதிதேவதை - பிருத்வி

இரத்தினம் - பவளம்

மலர் - செண்பகம்

குணம் - குருரன்

ஆசனவடிவம் - முக்கோணம்

தேசம் - அவந்தி

சமித்து - கருங்காலி

திக்கு - தெற்கு

சுவை - துவர்ப்பு

உலோகம் - செம்பு

வாகனம் - அன்னம்

பிணி - பித்தம்

தானியம் - துவரை

காரகன் - சகோதரம், பூமி, வீடு, கனரக வாகனம்

ஆட்சி - மேஷம், விருச்சகம்

உச்சம் - மகரம்

நீசம் - கடகம்

மூலத்திரிகோணம் - மேஷம்

உறுப்பு - தலை

நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

பால் - ஆண்

திசைகாலம் - 7 ஆண்டுகள்

கோசார காலம் 1 1/2 மாதம்

நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்

பகை - புதன், இராகு, கேது

சமம் - சுக்கிரன், சனி

உபகிரகம் - தூமன்

ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்

**************************************

சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என் அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலையும் கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்றார்போல் பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுபபலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.

நிறம் - வெண்மை

தேவதை - பார்வதி

பிரத்யதி தேவதை - கௌரி

இரத்தினம் - முத்து

மலர் - வெள்ளை அலரி

குணம் - வளர்பிறையில் சுபர், தேய்பிறையில் பாபர்

ஆசன வடிவம் - சதுரம்

தேசம் - யமுனா

சமித்து - முருங்கை

திக்கு - தென்கிழக்கு

சுவை - இனிப்பு

உலோகம் - ஈயம்

வாகனம் - முத்து விமானம்

பிணி - சீதளம்

தானியம் - பச்சரிசி

காரகன் - தாய்

ஆட்சி - கடகம்

உச்சம் - ரிஷபம்

நீசம் - விருச்சகம்

மூலத்திரிகோணம் - கடகம்

உறுப்பு - தோள்

நட்சத்திங்கள் - ரோகினி,அஸ்தம், திருவோணம்

பால் - பெண்

திசை காலம் - 10 ஆண்டுகள்

கோச்சார காலம் - 2 1/4 நாள்

நட்பு - சூரியன், புதன்

பகை - இராகு, கேது

சமம் - செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்

உபகிரகம் - பரிவேடன்

ஸ்தலம் - திருப்பதி

***************************************

சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார் . அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் காடு மலை புகழ் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.

சூரியன் இயற்கையிலே பாபர் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார்.


நிறம் - சிகப்பு

தேவதை - அக்கினி

பிரத்யதி தேவதை- ருத்திரன்

இரத்தினம்- மாணிக்கம்

மலர் - செந்தாமரை

குணம் -தாமஸம்

ஆசன வடிவம் - வட்டம்

தேசம் -கலிங்கம்

சமித்து -எருக்கு

திக்கு - நடு

சுவை -காரம்

உலோகம்- தாமிரம்

வாகனம் - தேர் மயில்

பிணி- பித்தம்

தானியம் - கோதுமை

நட்பு - சந்திரன் வியாழன் செவ்வாய்

பகை - சுக்கிரன் சனி ராகு கேது

சமம் - புதன்

ஆட்சி- சிம்மம்

நீசம் -துலாம்

உச்சம் - மேஷம்

மூலத்திரிகோணம் - சிம்மம்

உறுப்பு - மார்பு

நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

பால் - ஆண்

திசை காலம் - 6 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்

உபகிரகம் - காலன்

ஸ்தலம் - சூரியனார் கோவில்.

----------------------------------

The benefic planets are: இயற்கை சுபர்கள்
· Jupiter 
· Venus 
· Moon when waxing (located within 180 degrees after the Sun)
· Mercury when associated with benefic planets. 

The malefic planets are:  இயற்கை பாவர்கள் 
· Saturn 
· Mars 
· Rahu
· Ketu 
· Sun 
· Moon when waning (located within 180 degrees before the Sun)
· Mercury when associated with malefic planets

FUNCTIONAL MALEFIC PLANETS AS PER ASCENDANT  -பாபர்கள் , பாவ கிரகம் 

Aries: Mercury, Rahu and Ketu.
Taurus: Venus, Jupiter, Mars, Rahu and Ketu.
Gemini: Rahu and Ketu.
Cancer: Jupiter, Saturn, Rahu and Ketu.
Leo: The Moon, Rahu and Ketu.
Virgo: Saturn, Mars, the Sun, Rahu and Ketu.
Libra: Mercury, Rahu and Ketu.
Scorpio: Mars, Venus, Rahu and Ketu.
Sagittarius: The Moon, Rahu and Ketu.
Capricorn: The Sun, Jupiter, Rahu and Ketu.
Aquarius: The Moon, Mercury, Rahu and Ketu.
Pisces: The Sun, Venus, Saturn, Rahu and Ketu.

FUNCTIONAL BENEFIC PLANETS AS PER ASCENDANT - சுபர்கள் , சுப கிரகம் 

Aries: The Sun, the Moon, Mars, Jupiter, Venus and Saturn.
Taurus: The Sun, the Moon, Mercury and Saturn.
Gemini: The Sun, the Moon, Mars, Mercury, Jupiter, Venus and Saturn.
Cancer: The Sun, the Moon, Mars, Mercury, and Venus. 
Leo: The Sun, Mars, Mercury, Jupiter, Venus and Saturn.
Virgo: The Moon, Mercury, Jupiter and Venus.
Libra: The Sun, the Moon, Mars, Jupiter, Venus and Saturn.
Scorpio: The Sun, the Moon, Mercury, Jupiter and Saturn.
Sagittarius: The Sun, Mars, Mercury, Jupiter, Venus and Saturn.
Capricorn: The Moon, Mars, Mercury, Venus and Saturn.
Aquarius: The Sun, Mars, Jupiter, Venus and Saturn.
Pisces: The Moon, Mars, Mercury and Jupiter.


கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

No comments :

Post a Comment